விதவிதமான மருந்தாகும் விளக்கெண்ணெய்!
ஆமணக்கு… வறண்ட நிலத்திலும் கூட நன்கு வளரும் தாவரம். பெரும்பாலும் விதைகளுக்காகத்தான் இது பயிரிடப்படுகிறது.
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவ அகராதி தந்த மாமேதை த.வி.சாம்பசிவம் பிள்ளை, 16 ஆமணக்கு வகைகளைக் குறிப்பிட்டிருந்தாலும் சிற்றாமணக்கு, பேராமணக்கு, வ்வாமணக்கு,காட்டாமணக்கு ஆகிய நான்கு ஆமணக்கு வகைகள்தான் எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன.
இவைதான், மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் உள்ளன. இவற்றில் ஆமணக்கு, சிற்றாமணக்கு, செவ்வாமணக்கு ஆகிய மூன்றும் ஒரே வகைத் தாவரங்கள். காட்டாமணக்கு, வேறு வகை. சிற்றாமணக்கின் விதைகள் சிறியதாக இருக்கும். அவற்றைவிட சற்றுப் பெரிதாக இருக்கும், ஆமணக்கின் விதைகள். சிவப்பு நிறத் தண்டுகளைக் கொண்டது, செவ்வாமணக்கு. மற்றவகையில் இது ஆமணக்கை ஒத்தே இருக்கும். உள் மருந்துகளுக்குச் சிற்றாமணக்கு எண்ணெய், வெளிப்பூச்சு மருந்துகளுக்கு ஆமணக்கு எண்ணெய் என எடுத்துக்கொள்ள வேண்டும்.
60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நல்லெண்ணெயும் (எள் எண்ணெய்), ஆமணக்கு எண்ணெயும் (விளக்கெண்ணெய்) மட்டும்தான் பெருவாரியான மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. மேல்தட்டு மக்கள் மட்டுமே, தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்துள்ளனர். உடலுழைப்பாளிகள் பயன்படுத்தி வந்தது, ஆமணக்கு எண்ணெய் மட்டுமே. வயல்வெளி, ஆறு, வாய்க்கால் மற்றும் ஏரிக்கரைகளிலும் தன்னிச்சையாக வளர்ந்து கிடந்த சிற்றாமணக்குச் செடிகளிலிருந்து விதைகளை மக்களே சேகரித்து, அவர்களின் வீட்டு அடுப்பங்கரையிலேயே எண்ணெய் தயாரித்து அதையே சமையலுக்கும், வலிகள் தீர்க்கும் தைலமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தவிர வயிறு, குடல், கர்ப்பப்பை முதலான அனைத்து நோய்களுக்கும் ஆரம்பக்கட்ட மருந்தாக இந்த எண்ணெயைத்தான் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த எண்ணெய் புகையின்றி எரியக்கூடியது.
அதனால், இரவு நேரங்களில் விளக்கெரிக்க இந்த எண்ணெயைத்தான் பயன் படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான், ஆமணக்கெண்ணெய், ‘விளக்கெண்ணெய்’ என ஆனது. கன்னியாகுமரி மாவட்ட மக்கள், இன்றும் இதை ‘கொட்டைமுத்து எண்ணெய்’ என்றே சொல்கிறார்கள்.

சிற்றாமணக்கு விதைகளே சிறந்த மருத்துவக் குணம் கொண்டுள்ளன. ஆமணக்கிலிருந்து இரண்டு முறைகளில் எண்ணெய் எடுக்கலாம். ஆமணக்கு விதைகளை இயந்திர செக்குகளில் இட்டு, ஆட்டி எண்ணெய் பிழிவது ஒரு வகை. ஆமணக்கு விதைகளை இடித்துத் தண்ணீரில் கொதிக்க வைத்து, எண்ணெய் பெறுவது இன்னொரு முறை. இந்த இரண்டாவது முறை, ‘ஊற்றின எண்ணெய்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில்தான் நம் மூதாதையர்கள், எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர்.
பருப்பு வேகவைக்கும்போது அதில், இரண்டு துளிகள் ஊற்றின எண்ணெயை விட்டால், பருப்பில் உள்ள வாயு நீங்கிவிடும். பிறந்த குழந்தை முதல் கர்ப்பிணி மற்றும் முதியோர் வரை அனைவருக்குமான சிறந்த குளியல் எண்ணெய் இது. அனைத்து தரப்பினருக்குமான மலச்சிக்கலை நீக்குவதற்கு பாதுகாப்பான மருந்து இது. ஊற்றின எண்ணெயில் 3 முதல் 5 துளிகள் வரை இரவு படுக்கப்போகும் முன் குடித்து வர, மலச்சிக்கல் நீங்கும். சிறு குழந்தைகளுக்கு 2 துளிகள் போதுமானது. இது பக்கவிளைவற்ற பாதுகாப்பான மலமிளக்கி. ஊற்றின எண்ணெயுடன் கால் பங்கு எடையில் கடுக்காய்பிஞ்சுப் பொடியைச் சேர்த்து நன்கு அரைத்து வாய்வு, மூலக்கடுப்பு, ரத்தமூலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கப்போகும் முன் 5 மில்லி வரை குடித்து வர, அனைத்து மூலப்பிரச்சினைகளும் தீரும். இதற்கு ‘மூலகுடோரி தைலம்’ என்று பெயர். இது எல்லாச் சித்த மருத்துவக் கடைகளிலும் கிடைக்கும்.
‘தேரையர் தைல வருக்கச் சுருக்கம்’ எனும் அரிய நூல், சுகப்பிரசவம் ஏற்படுவதற்குக் கூறும் ‘பாவனப் பஞ்சாங்குலத் தைலம்’ எனும் அற்புதத் தைலம், சிற்றாமணக்கு விதைகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

சுகப்பிரசவம், அரிய நிகழ்வாகிவிட்ட இக்காலங்களில், கர்ப்பிணிகளின் கருவுக்குப் பாதுகாப்பாகவும், சுகப்பிரசவத்தையும் ஏற்படுத்தும் அற்புத மருந்துதான் இந்தப் பாவன பஞ்சாங்குலத் தைலம். கர்ப்ப காலத்தின் முதல் மாதம் தொடங்கி 10 மாதங்களும் தொடர்ந்து இத்தைலத்தைத் தினமும் சூரிய உதயத்துக்கு முன்னும், இரவு உணவுக்குப் பிறகும், 5 முதல் 10 துளிகளைக் காய்ச்சிய பசும்பாலில் கலந்து குடித்து வர கர்ப்பக் காலத்தில் இடைஞ்சல் செய்யும் தொந்தரவுகள் எதுவும் வராது. கர்ப்பக் காலத்தின் கடைசி மாதத்தில் இத்தைலத்தை இரவு மட்டும் 5 மில்லி அளவு உண்டு வர மிகுந்த நன்மையைத் தரும். கடைசி மூன்று நாட்களில் 10 மில்லி வரை இரவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு உண்டு வருவதால் பிரசவ வலியின் தாக்கமும் பிரசவ காலமும் குறைந்து நிச்சயமாக சுகப் பிரசவம் ஏற்படும்.
2015-ம் ஆண்டு முதல், தமிழக அரசு அறிமுகப்படுத்தி வழங்கி வரும், கர்ப்பிணிக்களுக்கான இலவச மருத்துவப் பெட்டகத்தில், பாவன பஞ்சாங்குலத் தைலமும் இடம்பெற்றுள்ளது. வாந்தி, பேதி மற்றும் வியர்வை உண்டாக்கும் மருந்துகளை வழங்கி, உடலை இயக்கும் உயிர்ச் சக்தியான நாடியில் உணரப்படும் குற்றங்களை நீக்கி, நமது பாரம்பர்ய சித்த மருத்துவம் முற்றிலுமாக குணமாக்கி விடுகிறது. எளிதான முறையில் செய்யப்படும் வாந்தி, பேதி மருந்துகள் சித்த மருத்துவத்தில் நிறைய உள்ளன. அவற்றில் முதன்மையானது ‘சித்தாதி எண்ணெய்’. இது ஊற்றின எண்ணெய் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. குணமாகாது என்று கைவிடப்பட்ட பல நோய்களில் இம்மருந்தைத் தொடர்ந்து வழங்கி வர நல்ல முன்னேற்றங்களைக் காணலாம். மற்ற தைலங்களுக்கெல்லாம் காய்ச்சும்போது, அடியில் படியும் வண்டல், மெழுகு பதமாக இருக்க வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால், சித்தாதி தைலத்துக்குச் சூடான எண்ணெயில் கைவிட்டால் கை கொப்பளிக்காத அளவுக்குத்தான் சூடு இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கொடிய வாத நோயான ‘ரொமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்’ என்று சொல்லப்படும் கை, கால், மூட்டு வலிகளால் அவதிப்படுபவர்கள் பலர் உண்டு. சித்த மருத்துவத்தில் ‘உதிரவாத சுரோணிதம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த வாத வலிகளுக்கு, ஆமணக்கு விதை கொண்டு ஒற்றடம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கிறது.
ஆமணக்கு விதைகளைத் தட்டி, ஓடு நீக்கி உள்ளிருக்கும் வெண்மை நிற பருப்புகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இவற்றை மண் அகலில் வறுத்து சூடாக்கி பருத்தித் துணியில் முடிந்து ஒற்றடமிட வேண்டும். வாத வலி, வீக்கமுள்ள இடங்களில் ஆமணக்கெண்ணெய் அல்லது பிற தைலங்களைத் தடவி 30 நிமிடங்கள் கழித்து, ஒற்றடம் கொடுக்கும்போது நல்ல பலன் கிடைக்கும். 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை இப்படி ஒற்றடம் கொடுக்கலாம்.
ஒரு நாளைக்கு மூன்று வேளை இப்படி ஒற்றடம் கொடுக்கலாம். ஆமணக்கு இலைகளில் பசு நெய் தடவி, அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டி வந்தால் இளம் தாய்மார்்களுக்குப் பால் சுரப்பு அதிகரிக்கும். ஆமணக்கு இலையை இடித்துச் சாறு பிழிந்து, தினமும் 15 மில்லி அளவு குடித்து வந்தாலும் பால் சுரப்பு அதிகரிக்கும்.

மார்பகக் காம்புகளில் ஏற்படும் புண்கள் மற்றும் வெடிப்புகளில் ஆமணக்கு எண்ணெய் பூசி வந்தால், விரைவில் குணமாகும். இதைப் பசுமாடுகளுக்கும் பயன்படுத்தலாம். ஆசன வாயில் ஏற்படும் கடுப்பு, புண், புழுக்கடி போன்றவற்றையும் ஆமணக்கு எண்ணெய் பூசி குணப்படுத்தலாம். கண்வலி மற்றும் கண்ணில் தூசி, மண் போன்றவற்றால் ஏற்படும் கண் சிவப்புக்கு கண்ணில் ஒரு துளி ஆமணக்கெண்ணெய் விட்டால், சரியாகிவிடும். மஞ்சள் காமாலை நோயையும் ஆமணக்கு இலை குணப்படுத்தும். ஒரு கைப்பிடி ஆமணக்கு கொழுந்து இலை, அரைத் தேக்கரண்டி சீரகம், 2 கிராம் பச்சைகற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து ஒரு நெல்லிக்காயளவு எடுத்து காலை ஓர் உருண்டை, மாலை ஓர் உருண்டை எனத் தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
இந்நோய் கண்ட சமயத்தில் உப்பு, புளிப்பு, கொழுப்பு நீங்கிய உணவுகளைத்தான் உட்கொள்ள வேண்டும். ஆமணக்கு இலைகளை, ஆமணக்கெண்ணெயில் வதக்கி பொறுக்கக்கூடிய சூட்டில் அடிவயிற்றில் வைத்து, ஒரு பட்டைத்துணியால் தளர்வாகக் கட்டி வைத்தால், கடுமையான சூதக வலியும் (மாதவிடாயினால் வரும் வயிற்றுவலி) 15 நிமிடங்களில் குறைந்துவிடும்.
சூட்டினால், உடம்பில் எந்தப் பகுதியில் கட்டிகள் ஏற்பட்டாலும் இதேபோல ஆமணக்கு இலைகளை, ஆமணக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வந்தால், கட்டிகள் விரைவில் பழுத்து உடையும். கட்டி உடைந்தவுடன் சீழை வெளியேற்றிவிட்டு அப்பகுதியில் தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் பொடி கலந்து பூசி வந்தால், புண்கள் விரைவில் ஆறும். ஆமணக்கு வேர்களைச் சேகரித்துச் சிறிய துண்டுகளாக வெட்டி, நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும். ஒரு துண்டு துணியில் 10 கிராம் பொடியை இட்டு முடிந்து கட்டி, புழுங்கல் அரிசியுடன் சேர்த்து வேகவைத்து நொய்கஞ்சியாகச் சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறையும்.
இவ்வளவு மருத்துவத்தன்மை வாய்ந்த ஆமணக்கெண்ணெயை நாம் விளக்கெரிக்க மட்டுமே பயன்படுத்துவது, காலத்தின் கோலம். இதை தலையிலோ, உடம்பிலோ பூசுவதற்குத் தயங்குகிறோம். இன்னும் மோசமாக மடமையின் குறியீடாக ஆகிவிட்டது, விளக்கெண்ணெய். வெளிநாட்டு நிறுவனங்கள், இதே எண்ணெயை வேறு பெயரில் சந்தைப்படுத்தி, நம் முன்னோர் பயன்படுத்தியது என்று சொன்னால், அப்படியே நம்பி வாங்கிப் பயன்படுத்துவோம். இதுதான் இன்றைய நிலைமை.
By on
No comments:
Post a Comment