பி.எப்., பணத்தை என்.பி.எஸ்., கணக்கிற்கு மாற்றலாம்!
பி.எப்., உறுப்பினர்கள். தங்கள் கணக்கில் சேர்ந்துள்ள தொகையை. தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்.,க்கு மாற்றிக்-கொள்ள வழிசெய்யும் நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பென்ஷன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, பி.எப்.ஆர்.டி.ஏ., அண்மையில் தொழிலாளர் சேமநல நிதியான பி.எப்., உறுப்பினர்கள், தங்கள் கணக்கில் உள்ள தொகையை, தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்., கணக்கிற்கு மாற்றிக் கொள்வதற்கான நடைமுறையை வெளியிட்டுள்ளது.
பி.எப்., உறுப்பினர்கள் விரும்பினால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இவ்வாறு மாற்றப்படும் தொகை, அந்த ஆண்டுக்கான வருமானமாக கருதப்படாது என்றும், எனவே, வரி விதிப்புக்கு உட்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்ஷன் ஆணையத்தின் இந்த அறிவிப்பு, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும்.
ஓய்வூதியத்திற்கான வழியாக தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்., அமைகிறது. தனியார் ஊழியர்களும் இதில் இணையலாம்.
என்.பி.எஸ்., திட்டத்தில் விரும்பிய வகையில் முதலீட்டை தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. மாறும் வசதிஎன்.பி.எஸ்., திட்டத்தை மேலும் பிரபலமாக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தொழிலாளர் சேமநல நிதியான பி.எப்., திட்டத்தில் இணைந்து இருப்பவர்கள், என்.பி.எஸ்., திட்டத்திற்கு மாறும் வசதி அறிமுகம் செய்யப்-படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 2015 பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி தற்போது இதற்கான நடைமுறையை பென்ஷன் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் தொடர்பாக, தொடர்ந்து கோரிக்கைகள் வந்த நிலையில், இந்த வசதி அறிமுகம் செய்யப்படுவதாக பென்ஷன் ஆணையம் தெரிவித்துள்ளது.
பி.எப்., கணக்கில் உள்ள தொகையை, என்.பி.எஸ்., கணக்கிற்கு மாற்றிக்கொள்ள, இந்த திட்டத்தின் கீழ் டயர் 1 கணக்கு இருக்க வேண்டும்.
இந்த கணக்கை பணியாற்றும் நிறுவனம் மூலம் துவக்கிக் கொள்ளலாம் அல்லது இணையம் மூலம் வழங்கப்படும் இ.என்.பி.எஸ்., வசதியை பயன்படுத்தி துவக்கிக் கொள்ளலாம். அதன் பிறகு, இதற்கான கோரிக்கையை உறுப்பினர்கள் தங்கள் அலுவலகம் மூலம், பி.எப்., அலுவலகத்திற்கு முறைப்படி சமர்ப்பிக்க வேண்டும்.
பின், அந்த தொகை, என்.பி.எஸ்., கணக்கிற்கு மாற்றப்படும். அரசு ஊழியர்கள் அல்லது தனியார் துறை ஊழியர்கள், இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். பி.எப்., அல்-லது சூப்பர் ஆனுவேஷன் நிதி அறக்கட்டளை தொகையை இவ்வாறு மாற்றிக் கொள்ளலாம்.
என்ன பலன்?
என்.பி.எஸ்., திட்டத்திற்கு மாறுவதற்கான இந்த வசதி, பல அணுகூலங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. பி.எப்., சேமிப்பிற்கான வட்டி, இந்த ஆண்டு, 8.65 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுக்கிறது.
என்.பி.எஸ்., திட்டத்தின் உறுப்பி¬னர்கள், தாங்கள் விரும்பிய வகையில் முதலீட்டு வாய்ப்பைத் தேர்வு செய்யலாம். அதில் சமபங்குகளில் அதிக முதலீட்டு வாய்ப்பைத் தேர்வு செய்யும் வசதியும் இருக்கிறது. எனவே, நீண்டகால நோக்கில், என்.பி.எஸ்., முதலீடு நல்ல பலனை அளிக்கலாம் என கருதப்படுகிறது.
பி.எப்., கணக்கைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
என்.பி.எஸ்., திட்டத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பு வரவேற்கத்தக்கது என கருதப்பட்டாலும், இதை பயன்படுத்த விரும்புகிறவர்கள், இரு திட்டங்களின் சாதக, பாதகங்கள் மற்றும் தங்கள் நிதி இலக்குகள் உள்ளிட்ட அம்சங்களை கவனமாகப் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று வல்லுனர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
வரம்புகள் கவனம்
என்.பி.எஸ்., திட்டத்தைப் பொறுத்தவரை, சமபங்கு முதலீடு வாய்ப்பு அதிக பலன் தரக்கூடியதாக கருதப்பட்டாலும், இதில் சில வரம்புகள் இருக்கின்றன. இதில், 60 வயதாகும் வரை முழுத்தொகையையும் விலக்கிக் கொள்ள முடியாது.
ஆனால், பி.எப்., உறுப்பினர்கள் வேலையை இழந்த பின், தொடர்ந்து 2 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தால், முழுத்தொகையையும் விலக்கி கொள்ளலாம்.
மேலும், என்.பி.எஸ்., திட்டத்தில் ஓய்வுபெறும் வயதில், 60 சதவீத தொகையை மட்டுமே விலக்கி கொள்ள முடியும்.
எஞ்சிய தொகை, பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
மேலும், என்.பி.எஸ்., முதலீடு வரிச்சலுகை கொண்டிருந்தாலும், பணத்தை விலக்கி கொள்ளும்போது. வரிவிதிப்பு உண்டு.
என்.பி.எஸ்., திட்டத்திற்கும் அனைத்து கட்டங்களிலும் வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இளம் வயதினருக்கு இந்த வாய்ப்பு பொருத்தமாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. எனவே, இந்த வாய்ப்பின் பல்வேறு அம்சங்-களை பரிசீலிக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
நன்றி : தினமலர் (வர்த்தக மலர்) - 13.03.2017
No comments:
Post a Comment