disalbe Right click

Monday, March 13, 2017

மோசடி வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடம்


மோசடி வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடம்

வங்கிகளில் ரூ.17,750 கோடி மோசடி; ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடம்

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், ஏப்.,– டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில், 17,750 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது. 

இது, தொடர்பாக, 3,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன ; அதில், வங்கி ஊழியர்கள், 450 பேரும் அடங்குவர்.

மோசடியில், பண மதிப்பின் அடிப்படையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஆக்சிஸ் பேங்க் ஆகியவை, முதல் மூன்று இடங்¬களில் உள்ளன. 

இந்த வங்கிகளில், முறையே, 2,237 கோடி ரூபாய், 2,250 கோடி ரூபாய் மற்றும், 1,998 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது. 

ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மோசடி பட்டியலில், தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முதலிடத்தில் உள்ளது.

அடுத்த இடங்களில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க், எச்.டி.எப்.சி., பேங்க், ஆக்சிஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா, சிட்டி பேங்க் ஆகியவை உள்ளன.

மதிப்பீட்டு காலத்தில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவைச் சேர்ந்த, 64 ஊழியர்கள் மீது, பண மோசடியில் தொடர்பு உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் (வர்த்தக மலர்) நாளிதழ் -14.03.2017

No comments:

Post a Comment