disalbe Right click

Friday, March 17, 2017

வங்கியில் மோசடி, மேனேஜருக்கு சிறைத்தண்டணை


வங்கியில் மோசடி, மேனேஜருக்கு சிறைத்தண்டணை

பாரத ஸ்டேட் வங்கியில் மோசடி: மேலாளருக்கு 7 ஆண்டு சிறை

மதுரை,:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பாரத ஸ்டேட் வங்கி கிளையில், ஒரு கோடி 98 லட்சம் ரூபாய் மோசடி தொடர்பாக, மேலாளர் உட்பட ஆறு பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கிளை மேலாளராக ராதாகிருஷ்ணன், உதவியாளராக ராஜகோபாலன் பணிபுரிந்தனர். 

இவர்களது நண்பர்கள் புதுக்கோட்டை விஸ்வநாதன், விருதுநகர் சிவாரங்கசாமி, சிவகாசி ராஜ்கபூர், திருநெல்வேலி ஷேக்அமீர். 

இவர்களின் வங்கி கணக்குகளை, அன்னவாசல் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு மாற்றினர்.இக்கணக்குகளுக்கு மும்பை வங்கிகளில் இருந்து காசோலைகள் மூலம் ஒரு கோடியே 98 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் வந்ததாக போலி ஆவணங்கள் தயாரித்தனர். 

காசோலைகளை நான்கு பேரின் கணக்குகள் மூலம் மாற்றி மோசடி செய்ததாக, சி.பி.ஐ., போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கணேசன் விசாரித்தார். 

ராதாகிருஷ்ணன், ராஜகோபாலன், ஷேக் அமீர், ராஜ்கபூர், சிவாரங்கசாமிக்கு தலா ஏழு ஆண்டு, விஸ்வநாதனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.03.2017


No comments:

Post a Comment