disalbe Right click

Sunday, March 5, 2017

காலிமனை வாங்க வங்கியில் கடன் கொடுப்பாங்களா?

காலிமனை வாங்க வங்கியில் கடன் கொடுப்பாங்களா?
வீட்டு மனை வாங்குவதற்கு வங்கியில் கடன் வாங்க முடியுமா?
மனை வாங்குவதற்கு வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் கடன்களை வழங்கி வருகின்றன.  ஆனால், அதற்கென்று சில நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது
வீட்டுக் கடன் வழங்குவதற்கு உள்ளது போல மனை வாங்குவதற்கான கடனுக்கும் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.

விண்ணப்பித்தவரது வருமானம், கடனைச் செலுத்துவதற்கான தகுதி ஆகியவை மிக முக்கியமாக ஆராயப்படுகிறது. மேற்கண்ட தகுதி இருந்தால் விண்ணப்பித்தவரின் மனு வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படும்.
இது மட்டும் போதுமா?
  1. நீங்கள் வாங்க நினைத்துள்ள மனையில் எந்த விதமான வில்லங்கமும் இருக்கக் கூடாது.
  2. அது குடியிருப்புப் பகுதியாக அரசால் வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
  3. விவசாய நிலமாகவோ, வணிக ரீதியான நிலமாகவோ கண்டிப்பாக இருக்கக் கூடாது.
  4. வரையறுக்கப்பட்ட உள்ளாட்சியின் எல்லைக்குள் மனை கண்டிப்பாக இருக்க வேண்டும்
  5. மனையின் விவரங்கள் அனைத்தையும் வங்கி ஊழியர்கள் தீர விசாரிப்பார்கள்.

மேற்கண்ட விதிமுறைகளின்படி நீங்கள் வாங்க இருக்கின்ற மனை இருந்தால், கடன் கிடைப்பதில் சிக்கல் இல்லை.
சரி, மனைக் கடன் எவ்வளவு கிடைக்கும்?
வீட்டுக்கடன்களுக்கான நடைமுறைதான் மனைக் கடனுக்கும் பின்பற்றப்படுகிறது.
மனை இருக்கின்ற பகுதியைப் பொறுத்தும் மனைக் கடன் நிர்ணயிக்கப்படும்.
பொதுவாக வீட்டுக் கடன் என்றால் அதிகபட்சம் 80 % வரை வங்கியில் இருந்து பெறமுடியும். மீதம் 20 % தொகையை நம் கையில் இருந்து செலுத்த வேண்டியதிருக்கும்.
அரசு வழிகாட்டு மதிப்பினை வைத்தே மனைக் கடன் வழங்கப்படும்.
பெரிய நகரங்கள் என்றால் அரசு வழிகாட்டு மதிப்பின்படி குறைந்தது 70 % வரை மனைக் கடன் கண்டிப்பாக கிடைத்துவிடும். இடத்தை பொறுத்து சில தனியார் வங்கிகள் மட்டும் 80 முதல் 85 % வரை மனைக் கடன் வழங்குகிறது. சிறிய நகரங்கள் என்றால், மனையின் மொத்த மதிப்பீட்டில் 50 முதல் 60 % வரைதான் மனைக் கடன் வழங்கப்படுகிறது
Image result for காலி மனை
என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
  1. வாங்க இருக்கின்ற இடத்தின் பத்திரம் மற்றும் மூல பத்திரங்கள்
  2. வாங்க இருக்கின்ற இடத்தின் 30 வருட வில்லங்க சான்றிதழ்
  3. வாங்க இருக்கின்ற இடம் குடியிருப்புக்கானது என்ற சான்றிதழ்
  4. வாங்க இருக்கின்ற இடத்தின் மதிப்பீட்டு சான்றிதழ்
  5. வாங்க இருக்கின்ற இடத்தின் வரைபடம்
  6. உங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
  7. உங்களது வருமான சான்றிதழ்
  8. உங்களது இருப்பிட சான்றிதழ்
  9. உங்களது அடையாள சான்றிதழ்
  10. உங்களது கடந்த 6 மாதங்களுக்கான வரவு செலவு (வங்கி) விபரங்கள்

காலி மனை கடனுக்கு வரிச் சலுகை கிடையாது
பொதுவாக நீங்கள் வீட்டுக் கடன் வாங்கும்போது அந்தக் கடனை அடைக்கும் தொகைக்கான வரி விலக்கு கொஞ்சம் வழங்கப்படுகிறது. ஆனால், நீங்கள் வாங்குகின்ற மனைக் கடனை அடைக்கச் செலுத்துகின்ற தவணைத் தொகைக்கு எந்த விதமான வரி விலக்கும் கிடையாது.

****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 

No comments:

Post a Comment