disalbe Right click

Friday, March 17, 2017

காவல் ஆணையர் மீது அவமதிப்பு வழக்கு


காவல் ஆணையர் மீது அவமதிப்பு வழக்கு!

அவமதிப்பு வழக்கில் 22ல் ஆணையர் ஆஜர் ஆவாரா?
சென்னை, : சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்த, பொன்.தங்கவேலு என்பவர், முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

முன்னாள் கவுன்சிலரின் சொத்துகள் குறித்து, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தங்கவேலுவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தெரிவித்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாததால், மாநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜ்க்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு மனுவை, அவரது வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்தார்.

இம்மனு, நேற்று முன்தினம், நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜராகாத, போலீஸ் ஆணையர் ஜார்ஜ்க்கு, நீதிபதி கண்டனம் தெரிவித்தார். 

நீதிமன்ற உத்தரவை ஏன் பின்பற்றவில்லை; நீதிமன்றத்தில் எப்போது ஆஜராவார் எனவும், நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து, நீதிபதி கிருபாகரன் முன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி, வரும், 22ல், போலீஸ் ஆணையர் ஜார்ஜ் ஆஜராவதாக தெரிவித்தார். 

அதனால், விசாரணையை, 22க்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.03.2017

No comments:

Post a Comment