disalbe Right click

Sunday, March 19, 2017

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி. பேராசிரியர் வேலை கிடைக்காது!

No automatic alt text available.

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி. பேராசிரியர் வேலை கிடைக்காது!

’தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தவர்களை, கல்லுாரி பேராசிரியர்களாக நியமிக்க முடியாது’ என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு, முதுநிலை கல்வியுடன், பிஎச்.டி., என்ற, ஆராய்ச்சி படிப்பு பட்டம் அல்லது, ’நெட், செட்’ என்ற இரண்டு தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், நெட், செட் முடிக்காதோர் மற்றும் பிஎச்.டி., பட்டம் பெறாதோர், ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளனர். அவர்களை பணி நீக்கம் செய்யும்படி, யு.ஜி.சி., ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், சில கல்லுாரிகள், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோரை, குறைந்த சம்பளத்தில் பேராசிரியர் பணிக்கு அமர்த்தியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து, யு.ஜி.சி., புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், ’கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ, பிஎச்.டி., படித்து பட்டம் பெற்றவர்கள், ’ரெகுலர்’ என்ற வகையில் சேர்க்கப்படுவர். 

’ஆனால், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோருக்கு, ரெகுலர் சான்றிதழ் கிடைக்காது. எனவே, அவர்களை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பேராசிரியர்களாக நியமிப்பதை ஏற்க முடியாது’ என, தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர் (கல்விமலர்) - 20.03.2017

No comments:

Post a Comment