disalbe Right click

Sunday, March 12, 2017

குறைந்தபட்ச இருப்பு தொகை வங்கிகள் கணக்கிடுவது எப்படி?


குறைந்தபட்ச இருப்பு தொகை வங்கிகள் கணக்கிடுவது எப்படி?

வங்கிகளில் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச, மாத சராசரி இருப்புத் தொகை இல்லாவிட்டால், வாடிக்கையாளர்கள், மாதம், 600 வரை அபராதம் செலுத்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 
வங்கி சேமிப்புக் கணக்கில், பண இருப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும், அதைப் பற்றி வாடிக்கையாளர்கள் கவலைப்படாத காலம் ஒன்று இருந்தது. 

இப்போதெல்லாம் அப்படி இருக்க முடியாது. வங்கியில் ஒரு மாதத்தில் குறைந்தபட்சம், குறிப்பிட்ட அளவு தொகையை எப்போதும் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற நிலை, தனியார் வங்கிகளில் கட்டாயமாகிவிட்டது. அது, ‘எம்.ஏ.பி.,’ என, குறிப்பிடப்படுகிறது. இப்போது, பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியும், ‘எம்.ஏ.பி.,’யை, அமல்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது, வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வங்கி, ‘எம்.ஏ.பி.,’ தொகையை, வைத்திருக்காத, சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களிடம், அபராதம் வசூலிக்கப்படும் என, அறிவித்துள்ளது. 

மத்திய அரசு அறிமுகம் செய்த, பூஜ்ஜிய இருப்பு, ‘ஜன்தன்’ வங்கிக் கணக்கு திட்டத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகளை சமாளிப்பதற்காக, இந்த முடிவை எடுத்திருப்பதாக அவ்வங்கி கூறியுள்ளது. 

அபராதம் எவ்வளவு? பொதுவாக, வங்கிகள், மாநகரம் மற்றும் நகரம்; சிறிய நகரம்; ஊரகம்; மற்றும் கிராமப்புறம் என, பல்வேறு வகையாக, வாடிக்கையாளர்களைப் பிரித்து, எம்.ஏ.பி., தொகையை, நிர்ணயித்துள்ளன. 

அந்த, எம்.ஏ.பி., இருப்பு குறைவாக இருந்தால், அதற்கு ஏற்ப, அவை அபராதமும் விதிக்கின்றன. அது, ஒவ்வொரு வங்கிக்கும் சிறிது மாறுபடுகிறது. 

பொதுவாக, எம்.ஏ.பி., அளவு 2,500 ரூபாயில் துவங்குகிறது; பின், 2,500 – 5,000 ரூபாய்; 5,000 – 7,500; மற்றும் 7,500 – 10,000 என, பல வகையாக பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப அபராதம் வசூலிக்கப்படுகிறது. மாநகரப்பகுதி வாடிக்கையாளர்களுக்கு, பெரும்பாலும், எம்.ஏ.பி., 10 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

 கிராமங்களில், அது, 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 எச்.டி.எப்.சி., வங்கியில், மாநகர பகுதியில், எம்.ஏ.பி., தொகை வைத்து இருக்காவிட்டால், அதிகபட்சம், 600 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. 

ஐ.சி.ஐ.சி.ஐ.,யில், 450 ரூபாய்; 

ஆக்சிஸ் வங்கியில், 350 ரூபாய்; 

பாரத ஸ்டேட் வங்கியில், 100 ரூபாய் 

என, வங்கிக்கு வங்கி அது மாறுபடுகிறது. 

இவற்றுடன் கூடுதலாக, 14% சேவை வரி மற்றும் 0.5% கிருஷி கல்யாண் மற்றும் 0.5% ஸ்வச் பாரத் வரி விதிக்கப்படுகிறது. 

பாரத ஸ்டேட் வங்கியில், மாநகர கிளைகளில், ‘எம்.ஏ.பி.,’ 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நகரங்களுக்கு, 3,000 ரூபாய்; 

சிறிய நகரங்களுக்கு, 2,000 ரூபாய்; மற்றும் 

கிராமங்களுக்கு, 1,000 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அபராதத்தை பொறுத்தவரை, 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விதிக்கப்படவுள்ளது. வங்கிகள், எம்.ஏ.பி., தொடர்பான அபராதங்களை செலுத்தாதவர்களுக்கு, வங்கிகள், இமெயில், எஸ்.எம்.எஸ்., மூலமாக, தகவல் அனுப்புகின்றன. அப்படியும் அபராதத்தை செலுத்தாவிட்டாலோ, இருப்பு பராமரிக்கப்படா-விட்டாலோ, அபராதம் கூடிக் கொண்டே போகும். 

அந்த சேமிப்புக் கணக்கில் பணம் டிபாசிட் செய்யப்படும் ¬போது, அந்த நிலுவைத் தொகை வசூலிக்கப்படுகிறது. எனினும், வங்கிக் கணக்குகளை ரத்து செய்யப்படுவதில்லை; 

சட்டரீதியான நடவடிக்கையோ பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை என்பது ஆறுதல்!

மாத சராசரி கணக்கீடு எப்படி? 
வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காதவர்களுக்கு, அபராதத் தொகை, ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளில் விதிக்கப்படுகிறது. அது, மாத சராசரி குறைந்தபட்ச இருப்பு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 

இதை கணக்கிடுவது எப்படி? 
ஒவ்வொரு நாள் இறுதியிலும், சேமிப்புக் கணக்கில் மீதம் இருக்கும் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, 30 நாளும் அவ்வாறு தினசரி கணக்கிடப்படும். அதை மொத்தமாகக் கூட்டி, வரும் தொகையை, 30 அல்லது 31ல் வகுத்தால் வரும் தொகை தான் மாத குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகை ஆகும். 

மெட்ரோ வாடிக்கையாளர்களுக்கு!

வங்கி எம்.ஏ.பி., அப¬ராதம் (ரூபாயில்)

எச்.டி.எப்.சி., 10,000 150–600 

ஸ்டேட் வங்கி 5,000 50–100

 ஐ.சி.ஐ.சி.ஐ., 10,000 350–450 

ஆக்சிஸ் 10,000 350**

ஆக்சிஸ் வங்¬கியில், ஒவ்வொரு 100 ரூபாய் இருப்பு குறைவுக்கும், 10 ரூபாய் அபராதத்தொகை, 350 ரூபாய்க்கு மிகாமல் வசூலிக்கப்படுகிறது.

நன்றி : தினமலர் (வர்த்தக மலர்) - 13.03.2017


No comments:

Post a Comment