தத்தெடுப்பு வழக்குகள் விசாரிக்கலாம்!
குடும்ப நல நீதிமன்றங்களில் தத்தெடுப்பு வழக்குகள் : உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: குடும்ப நல நீதிமன்றங்களில் தத்தெடுப்பு வழக்குகளை விசாரிக்கலாம், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.
மதுரை கிரேஸ் கென்னட் பவுண்டேஷன் நிர்வாகம் தாக்கல் செய்த மனு:
கைவிடப்பட்ட குழந்தைகளை பராமரித்து வருகிறோம். அக்குழந்தைகளை தத்து கொடுக்கிறோம். வெளி நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் தத்து கொடுக்கிறோம். இதற்காக மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் மனு செய்தோம்.
அந்நீதிமன்றம்,'இளம் சிறார் நீதிச் (குழந்தை பராமரிப்பு, பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் தாக்கலாகும் வழக்குகளை விசாரிக்க, இந்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. குடும்பநல வழக்குகளில் இருதரப்பினரிடையே சமரசம் செய்யப்படும். இல்லாதபட்சத்தில் வழக்கு விரைந்து முடிக்கப்படும். திருமணம் மற்றும் குடும்ப விவகாரங்களை மட்டுமே விசாரிக்க முடியும். இளம் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் தாக்கலாகும் வழக்குகளை விசாரிக்க இந்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை,' என 2016 நவ.,30ல் நிராகரித்தது.
இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஜெ.நிஷாபானு கொண்ட அமர்வு உத்தரவு:
இளம் சிறார் நீதிச் (குழந்தை பராமரிப்பு, பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் தாக்கலாகும் மனுக்கள் மீது சட்டத்திற்குட்பட்டு, தகுந்த உத்தரவு பிறப்பிக்க குடும்ப நல நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம்,
என்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் -14.03.2017
No comments:
Post a Comment