வழக்கறிஞராக பணியாற்ற என்ன செய்ய வேண்டும்?
இந்திய பார் கவுன்சில் தேர்வு!
கோவை அரசு சட்டக் கல்லுாரியில் நேற்று நடந்த, அனைத்து இந்திய பார் கவுன்சில் தேர்வை, 458 பேர் எழுதினர்.
நாடு முழுவதும், 2010ம் ஆண்டு முதல், அனைத்து இந்திய பார் கவுன்சில் தேர்வு நடத்தப்படுகிறது. இவ்வாண்டுக்கான வழக்கறிஞர் தகுதிகான் பார் கவுன்சில் தேர்வு, கோவை உட்பட, 48 மையங்களில் நடந்தது.
கோவை அரசு சட்டக் கல்லுாரியில், தமிழ் வழித்தேர்வை, 229 பேர், ஆங்கில வழித்தேர்வை, 229 பேர் என, மொத்தம் 458 பேர் எழுதினர்.
கோவை அரசு சட்டக்கல்லுாரி முதல்வரும், தேர்வு ஒருங்கிணைப்பாளருமான கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ”சட்டப்படிப்பு முடித்து (பி.எல்.,) பார் கவுன்சிலில் பதிவு செய்த, மூன்றாண்டு களுக்குள் அனைத்து இந்திய பார் கவுன்சில் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, வழக்கறிஞராக வாதாட முடியும்.
”தேர்வில், 100 ’அப்ஜெக்டிவ்’ வகை வினாக்கள் கேட்கப்பட்டன. இரண்டரை மாதங்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகலாம்,” என்றார்.
நன்றி : தினமலர் (கல்விமலர்) - 27.03.2017
No comments:
Post a Comment