புகார் அளித்தவரிடமே லஞ்சம் பெற்ற அதிகாரி
தான பத்திரம் மீது விசாரணை கை நீட்டிய 'தங்கம்' கைது!
விருதுநகர், : போலியாக பத்திரம் தயாரித்ததாக அளித்த புகாரை விசாரிக்க 3,000 ரூபாய் வாங்கிய, விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலக டைப்பிஸ்ட் தங்கத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் சாமியார் கிணற்றுதெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன். பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இவரது குடும்பத்தினர் பெயரில் பொதுச் சொத்துக்கள் உள்ளன.
'இதை பங்காளிகளில் ஒருவரான வெள்ளைச்சாமி, போலி பத்திரம் தயாரித்து தானம் கொடுத்து விட்டார்' என, சென்னை பத்திரப்பதிவு ஐ.ஜி.,யிடம் பாண்டுரங்கன் புகார் கொடுத்தார்.
லஞ்சம் கொடு:
இதை விசாரிக்க விருதுநகர் மாவட்ட பதிவாளர் சந்தானத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்பிரச்னையில் பதிவாளர் அலுவலக டைப்பிஸ்ட் தங்கம் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் பாண்டுரங்கன் புகார் அளித்தார். அலுவலகத்தில் நேற்று, டைப்பிஸ்ட் தங்கம் 3,000 ரூபாய் வாங்கியபோது, இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
கேட்டது ரூ.10 ஆயிரம்:
பாண்டுரங்கன் கூறுகையில், ''எனக்கு சாதகமாக விசாரிக்க தங்கம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். மறுத்ததால், மூன்றா யிரம் ரூபாயாக குறைத்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாமல் புகார் கொடுத்தேன்,'' என்றார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 17.03.2017
No comments:
Post a Comment