குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் அபராதம்:
வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் அபராதம்: சட்டப்படி சரியா ?
வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகையானது 100 ரூபாயிலிருந்து இப்பொழுது பல மடங்கு உயர்ந்துள்ளது. தற்பொழுது, குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5 ஆயிரம் வைத்திருக்க வேண்டும். இதை பராமரிக்கத் தவறினால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும்’ என்று ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பு பின்வருமாறு:
சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை (Minimum Balance) வைக்காத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும்.
பெருநகரங்களில் இருப்பவர்கள் வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000, நகரங்களில் இருப்பவர்கள் ரூ.3000, புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000, கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 என குறைந்தபட்ச தொகை வைத்திருக்க வேண்டும்.
இந்த தொகை குறைந்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறைந்தபட்ச இருப்பு தொகையை விட கணக்கில் எவ்வளவு குறைந்துள்ளதோ அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும்.
75 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.75 அபராதத்துடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.
50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.50 மற்றும் சேவை வரி அபராதமாக விதிக்கப்படும்.
சொந்த ஏடிஎம்களில் 10 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்கலாம் என்ற நடைமுறையும் ஏப்ரல் 1 முதல் அறிமுகம் செய்யப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது பற்றி ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?
சுற்றறிக்கை எண்.
DBOD.Dir.BC.53/13.10.00/2002-03 நாள் 26.12.2002 தெரிவிப்பதாவது:
வங்கியில் கணக்கு தொடங்கும் முன் வங்கிகள் வாடிக்கையாளர் அல்லது நுகர்வோரிடம் குறைந்தபட்ச இருப்புத் தொகை பற்றி பெரிதுபடுத்திக் கொள்வதில்லை. அதேபோல் கட்டணங்கள் வசூலிப்பது பற்றியும் தெரிவிப்பதில்லை.
ஆகவே, வங்கிக் கணக்கைத் துவங்குவதற்கு முன் நுகர்வோரிடம், குறைந்த படச இருப்புத் தொகை பற்றி விளக்கிட வேண்டுமென குறிப்பிடுகிறது. இதில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது.
சுற்றறிக்கை எண்.
RBI/2014-15/308/DBR.Dir.BC.No.47/13.03.00/2014-1 நாள் 20.11.2014 இல்
நிதிக் கொள்கை விளக்கம் 2014-15 இல்
நுகர்வோர்களுக்கான ஒழுங்கு மற்றும் வளர்ச்சி கொள்கைகளை பற்றி விளக்குகிறது.
மேலும் நுகர்வோர்களின் கவனக் குறைவை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
மேலும் குறைந்தபட்ச இருப்பை ஒரு வாடிக்கையாளர் பராமரிக்காத பொழுது, அவர்கள் மீது அபராதம் விதிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு அளிக்கப்படும் சேவைகளை நிறுத்திவிடலாம்.
அதன்பின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க ஆரம்பித்தவுடன் மீண்டும் நிறுத்தப்பட்ட சேவைகளை தரலாம் என் அறிவுறுத்துகிறது.
மேலும், தாமோதரன் கமிட்டியின் பரிந்துரைப்படி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள்
1. ஒரு வங்கியானது, நுகர்வோரின் குறைந்தபட்ச இருப்புத் தொகையானது குறையும் பொழுது, அபராத தொகை பற்றிய விவரங்களை குறுஞ்செய்தியாகவோ அல்லது மின்னஞ்சலாகவோ நுகர்வோருக்கு உடனே தெரிவிக்க வேண்டும்
1. குறைந்தபடச் இருப்புத் தொகை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் போடவில்லையென்றால், அபராதத் தொகையினை முதலில் வாடிக்கையாளருக்கு தெரிவித்த பின்னர் வசூலிக்க வேண்டும்.
1. அபராத தொகை பற்றிய கொள்கை, வங்கியின் உயர்மட்டக் குழுவின் ஒப்புதலுக்கு பின்னரே முடிவு செய்ய வேண்டும்.
1. அபராத தொகையானது, குறைந்தபட்ச தொகையின் அளவைப் பொறுதே இருக்க வேண்டும். இதற்கு ஒரு வசூல் முறையை உருவாக்க வேண்டும்.
1. அபராதத் தொகையானது ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருக்க வேண்டும், அபரீதமாக இருக்கக் கூடாது.
1. அதே போல், இருப்புக் கணக்கு நெகடிவாக மாறாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்,1986 பிரிவு.2(o) இன் படி வங்கிச் சேவையும் அடங்கும். ஆகவே இச்சட்டப்படி, நுகர்வோரிடம் அபராதம் வசூலிக்க வங்கிக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
நன்றி : திரு C.P.சரவணன், வழக்கறிஞர், 9840052475
09.03.2017 - தினம்ணி நாளிதழில் இருந்து
No comments:
Post a Comment