இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 125
நடுவர் அல்லது காவல்துறை அதிகாரி அல்லது அலுவலர் எவரிடத்திலும் குற்றம் ஏதேனும் செய்யப்பட்டது என்பது பற்றிய தகவல் அவர் எங்கிருந்து பெற்றார்? என்று சொல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.
வருவாய்த்துறை அலுவலர் எவரும், பொது வருவாய்க்கு எதிராகக் குற்றம் ஏதேனும் செய்யப்பட்டது பற்றிய தகவல்களை அவர் எங்கிருந்து பெற்றார்? என்று சொல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு-125ன் கீழ் குற்றம் சம்பந்தமான தகவல்களை அதை பெற்ற அதிகாரி அல்லது அலுவலர் எவரும் வெளியில் கூற வேண்டியதில்லை என்று மேற்கண்டபடி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அரசுத்துறை அதிகாரியிடம் குற்றம் சுமத்தப்பட்டவர், என்மீது குற்றமா, யார் சொன்னது? என்று கேட்டுவிட்டால் புகார் மனுவை ஜெராக்ஸ் எடுத்து அவரது கையில் கொடுத்துவிடுகிறார்கள். புகார்தாரர் தாக்கப் படுகிறார். புகார் மீதான நடவடிக்கை முடக்கப்படுகிறது.
இதனால்தான் நாட்டில் நடக்கின்ற குற்றங்களை பொதுமக்கள் கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர்.
அதனால்தான், அரசுத் துறை மூலமாக வெளியிடப்படும் சில விளம்பரங்களில், நீங்கள் கொடுக்கின்ற புகார் ரகசியமாக பாதுகாக்கப்படும்! என்று விளம்பரம் வெளியிட வேண்டிய நிலைமை நம் நாட்டில் உள்ளது.
இந்நிலை மாற வேண்டும்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 23.04.2017
No comments:
Post a Comment