disalbe Right click

Saturday, April 1, 2017

தனியார் வங்கிக்கு ரூ.22,000/- அபராதம்!


தனியார் வங்கிக்கு ரூ.22,000/- அபராதம்!

திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் மதுரையில் உள்ள தனியார் வங்கிக்கு ரூ.22 ஆயிரம் விதித்து உத்தரவிட்டது.

திண்டுக்கல் தெத்துப்பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல்,(25). இவர் 2011ல் திண்டுக்கல்-கரூர் ரோட்டில் உள்ள தனியார் டூவீலர் நிறுவனத்தில் பைக் வாங்கினார். அதற்காக மதுரை தனியார் வங்கியில் கடன் பெற்றார். 

பிறகு மாத தவணை முறையில் கடனை செலுத்தினார். கடனை முழுவதுமாக செலுத்தியபின் பைக் ஆவணங்களை திருப்பி கேட்டார். 

வங்கியில் பைக் விற்ற நிறுவனத்தையும், அந்த நிறுவனம் வங்கியையும் கை காட்டின. மீண்டும் வங்கியில் கேட்டபோது முறையான தகவல்கள் தராமல் அலைக்கழித்தனர். 

திண்டுக்கல் நுகர்வோர் கோர்ட்டில் 2014ல் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தது.

அபராதம்:
நீதிபதி அய்யப்பன், “கடனை செலுத்திய பிறகும் பைக் ஆவணங்களை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர், ஆவணங்களை அவரிடம் கொடுக்க வேண்டும், 

மேலும் இழப்பீடாக ரூ. 20,000, வழக்குச் செலவு ரூ.2,000 சேர்த்து ரூ, 22 ஆயிரத்தை 30 நாட்களுக்குள் வங்கி கிளை மேலாளர் வழங்க வேண்டும். 

இல்லையெனில், அபராதத்தை செலுத்தும் வரை 7.5 வட்டியுடன் சேர்த்து பணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். உறுப்பினர் ஷேக் அப்துல்காதர் உடன் இருந்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் – 31.03.2017 

No comments:

Post a Comment