disalbe Right click

Saturday, April 1, 2017

தனியார் வங்கி மேலாளருக்கு ரூ.22,500/- அபராதம்!

Image may contain: text

தனியார் வங்கி மேலாளருக்கு ரூ.22,500/- அபராதம்!

ஊட்டி : வங்கி உறுப்பினரால் அடகு வைக்கப்பட்ட நகையை, முறைகேடாக பயன்படுத்திய வங்கி அதிகாரிக்கு, ஊட்டி நுகர்வோர் கோர்ட் அபராதம் விதித்தது.

குன்னுார் அருகேயுள்ள சட்டன் எஸ்டேட்டில் வசிக்கும், மாரியம்மாள் என்பவர், தனது தங்கச் சங்கிலியை, குன்னுார் கூட்டுறவு வங்கிக் கிளையில் அடகு வைத்திருந்தார். கடன் தவணையை முடித்து, அடகு வைத்த நகையை திரும்பக் கேட்ட போது, வங்கி மேலாளரால் நகையை திரும்பக் கொடுக்க முடியவில்லை. 

அந்த தங்கச் சங்கிலியை, வங்கி மேலாளர் முறைகேடாக பயன்படுத்தியிருப்பது, தெரியவந்தது.

இதுதொடர்பாக, மாரியம்மன், இத்தலாரில் செயல்படும் 'கிங்ஸ் ஆப் கிங்ஸ்' நுகர்வோர் அமைப்பின் பொது செயலர் போஜன் என்பவரிடம் புகார் செய்தார். 

இப்புகாரை, போஜன், ஊட்டி நுகர்வோர் கோர்ட்டில் வழக்காக பதிவு செய்தார்.வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட் தலைவர் ஜெயசங்கரன், உறுப்பினர்கள் ராஜலட்சுமி, ரத்தினம் ஆகியோர் அடங்கிய குழு வழங்கிய தீர்ப்பில், 'மாரியம்மாளின் தங்க சங்கிலியை, வங்கி மேலாளர் அவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். 

மாரியம்மாவுக்கு, இழப்பீடாக, 20 ஆயிரம் ரூபாய், கோர்ட் செலவாக, 2,500 ரூபாய் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 25.02.2017

No comments:

Post a Comment