பயணியை எழுப்பாததற்கு 5000 ரூபாய் அபராதம்
பயணியை
எழுப்பி விடாததால் ரயில்வேக்கு 5,000
ரூபாய்
அபராதம்
மத்தியப்
பிரதேசத்தைச் சேர்ந்த கிரிஷ் கார்க் என்ற வழக்கறிஞர், கடந்த 2015-ம் ஆண்டு கோவை-ஜெய்ப்பூர்
சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். அவர் கோட்டா என்ற பகுதிக்குச் செல்ல
திட்டமிட்டு இருந்தார். அப்போது, 139 என்ற ரயில்வே வாடிக்கையாளர் சேவை
மையத்துக்கு தொடர்பு கொண்ட அவர், கோட்டா ரயில் நிலையம் வந்தால் என்னை அலர்ட் செய்து
எழுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதற்கு
139
சேவை
தரப்பிலும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால், கோட்டா ரயில் நிலையம்
வந்தபோது அவரை, 139 சேவை மையம் அலர்ட் செய்யவில்லை. இதையடுத்து, அவராகவே சுதாரித்துக்
கொண்டு கடைசி நேரத்தில், கோட்டா
ரயில் நிலையத்தில் இறங்கினார். இதைத்தொடர்ந்து அவர், "நான் இந்த சம்பவத்தால் மன
வேதனை அடைந்து விட்டேன். இதனால் எனக்கு ரயில்வே நிர்வாகம் 20,000 ரூபாய் இழப்பீடு தர
வேண்டும்" என்று கூறி இருந்தார்.
இதையடுத்து, கிரிஷின் மனுவை தள்ளுபடி
செய்யக் கோரி நீதிமன்றத்தில், ரயில்வே நிர்வாகம் மனு தாக்கல் செய்து இருந்தது. இந்த
வழக்கு விசாரணையின்போது, மன
வேதனை அடைந்த கிரிஷ்க்கு 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த
மாத இறுதிக்குள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், இந்த வழக்கு
செலவுகளுக்காக, கிரிஷ்க்கு
2,000
ரூபாய்
வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரா.குருபிரசாத்
நன்றி : விகடன் செய்திகள் - 29.04.2017
No comments:
Post a Comment