இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை அதிகாரி
இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை அதிகாரியானார் சேலம் பிரித்திகா யாசினி சேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினிக்கு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணி கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே காவல் துறை அதிகாரியாக பதவி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.
சேலம்: சேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினிக்கு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணி கிடைத்துள்ளது.
சேலத்தைச் சேர்ந்தவர் பிரித்திகா யாசினி. திருநங்கையான இவர், தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுதினார்.
இதில் அவர் தேர்ச்சி பெற்றார். அதன் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் பணி நியமன ஆணையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வழங்கினார். இதையடுத்து ஓராண்டாக வண்டலூர் அருகே உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி மையத்தில் யாசினி பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பணி நிறைவு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.
அப்போது எஸ்.ஐ.பணிக்கு தேர்வான பிரித்திகா யாசினி தருமபுரியில் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் 02.04.2017
No comments:
Post a Comment