disalbe Right click

Saturday, April 1, 2017

காசோலை திரும்பிய வழக்கு - வங்கி மேலாளருக்கு அபராதம்


காசோலை திரும்பிய வழக்கு - வங்கி மேலாளருக்கு அபராதம்

காசோலை திரும்பிய வழக்கு: வங்கி மேலாளருக்கு அபராதம்,  நுகர்வோர் கோர்ட் உத்தரவு

பெரம்பலூர்,: குன்னம் தாலுக்கா, வேப்பூரைச் சேர்ந்த மோகன். இவரது மனைவி ஜெயந்தி. ஆசிரியை. இவர் சம்பளம் பெறும்   வேப்பூர் ஐஓபி கிளையில் வங்கிக் கணக்கிலிருந்து எல்ஐசி நிறுவனத்திற்கான இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்த 2011 ஜூன் 20ம்தேதி ரூ16,618க்கான காசோலையை எல்ஐசி நிறுவனத்திற்கு அனுப்பினார். 

சில நாட்கள் கழித்து ஜெயந்தி கொடுத்த காசோலையில் உள்ள கையெழுத்து ஒப்பாக வில்லையெனக் கூறி காசோலை திரும்பிவந்தது. 

இதையடுத்து சம்மந்தப்பட்ட எல்ஐசி நிறுவனம், ஜெயந்தி அனுப்பிய ரூ.16,618ஐ, அபராதத் தொகையாக ரூ.135 ஐயும் சேர்த்து ரொக்கமாகத் தரும்படி வலியுறுத்தியது. 

தனது வங்கிக் கணக்கில் தேவையான அளவுக்குப் பணம் இருப்பு வைக்கப்பட்டிருந்தும், குறிப்பிடத்தகுந்த காரணமின்றி, சேவைக் குறைபாடு செய்துள்ளதால் தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, கடந்த 2012 ஜனவரி 23ம் தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆசிரியை ஜெயந்தி வழக்கு தொடர்ந்தார். 

நேற்று நீதிமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட் சுமி ஆகியோர் முன்னிலையில் வழக்கினை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிபதி கலியமூர்த்தி, சம்மந்தப்பட்ட வங்கிக் கிளை மேலாளர், ஜெயந்தியின் மனஉளைச்சலுக்கு இழப்பீடுத் ரூ.10 ஆயிரத்தையும், வழக்கு செலவுக்காக ரூ. 3ஆயிரம் என மொத்தம் ரூ. 13ஆயிரத்தை வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டார்.

 நன்றி : தினகரன் நாளிதழ் - 23.03.2017

No comments:

Post a Comment