எனிமா - ஆறு
மாதங்களுக்கு ஒரு முறை அவசியம்!
ஒரு கிளீன் ரிப்போர்ட்
ஹெல்த்வான்மதி, பொதுநல மருத்துவர் - உலகநாதன், சித்த மருத்துவர்
வாரத்துக்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வயிற்றைச் சுத்தம் செய்வது என நம்
முன்னோர் சில ஆரோக்கிய வழிமுறைகளைப் பின்பற்றினார்கள். வயிற்றைச் சுத்தப்படுத்த
உண்ணாநோன்பு, விளக்கெண்ணெய் - வேப்பெண்ணெய்
கலந்து குடிப்பது, எனிமா எடுத்துக்கொள்வது எனப் பல
வழிமுறைகளைக் கடைப்பிடித்தனர். இதில், எனிமா இன்றுவரை மருத்துவ ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும்
ஒன்று. அந்தக் காலத்தில் இப்படி உடலைச் சுத்தம் செய்வதற்கு என்றே ஒரு நாளை
ஒதுக்கினார்கள். இன்றோ வீட்டைச் சுத்தம் செய்யக்கூட நேரம் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வயிற்றைச் சுத்தம் செய்வது என்றால் என்ன, எப்படிச் செய்வது, யார் யாருக்கு
எனிமா தேவை என்று பார்ப்போம்.
எனிமா என்றால் என்ன?
உணவு செரிமானத்துக்குப் பிறகு, கழிவுகளாக வெளியேறும்போது, சில நேரத்தில் பெருங்குடலிலேயே தங்கிவிடுகின்றன. இப்படித் தங்கும் கழிவுகள் நஞ்சாக மாறி நமக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில் செரிமான மண்டலத்தின் செயல்திறனையே பாதித்து, மலச்சிக்கல் உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால், தொடர் தலைவலி, முதுகுவலி, மனச்சோர்வு, உடல்சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும். பெருங்குடலைத் திரவம்கொண்டு அலசிச் சுத்தப்படுத்தும் மருத்துவமுறைக்குத்தான் ‘எனிமா’ என்று பெயர்.
பேதி மாத்திரையும் எனிமாவும் ஒன்றா?
எனிமா என்பது உடல் கழிவுகளை வெளியேற்றச் செய்யப்படும் ஒரு செயல்முறை. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவர் பரிந்துரையுடன் மாத்திரை எடுத்து வாந்தி, பேதியுடன் வயிற்றைச் சுத்தப்படுத்துவது ஒரு வகை டீடாக்ஸ் முறை. மலக்குடல், சிறுகுடல், பெருங்குடல், ஆசனவாய் ஆகிய அனைத்துப் பகுதிகளையும் சுத்தப்படுத்தும் டீடாக்ஸ் முறை இது. நீண்டகாலம் பயன்படும் முறை. ஆனால், எனிமா ஆசனவாய்க்கு மேல் உள்ள மலக்குடல் மற்றும் பெருங்குடலின் ஒரு பாகத்தை மட்டும் சுத்தப்படுத்துகிறது. இது, தற்காலிகப் பலனைத் தரும்.
எனிமா யாருக்குக் கொடுக்கப்படும்?
* தொடர்ந்து அதிகமாக மலச்சிக்கல் ஏற்படுபவர்கள்.
* ஏதேனும் அறுவைசிகிச்சைக்குத் தயாராக்கப்படுபவர்கள்.
* முறையான உணவுப் பழக்கங்களை மேற்கொண்டும், உடற்பயிற்சி செய்தும் மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள்.
* பெருங்குடலில் ஏதேனும் பரிசோதனை செய்ய வேண்டியவர்கள்.
* மலம் கழிக்கச் சிரமப்படும் வயதானவர்கள்.
* ஹைட்ரேஷன் தெரப்பி (உடலில் நீர் இழப்பு ஏற்பட்டவருக்கு ஆற்றலை அதிகரிப்பதற்காக தரப்படும் சிகிச்சை) செய்ய உள்ளவர்கள்.
எனிமா வகைகள்
எனிமாவில் மூன்று வகைகள் உள்ளன. ஒன்று ‘கிளென்ஸிங் எனிமா’ (Cleansing enema). இது, சுத்தப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. கோலனோஸ்கோப்பி (Colonoscopy) போன்ற பரிசோதனைகளுக்கு முன்பு இது செய்யப்படுகிறது. மலச்சிக்கல், அதனால் ஏற்படும் தலைவலி போன்ற பிரச்னைகள் இந்த முறையால் குணமாகின்றன. இந்த எனிமா, தண்ணீருடன் ஏதாவது ஒரு மலமிளக்கி மருந்தைக் கலந்து, ஆசனவாயின் உள்ளே செலுத்தப்படும். இந்த எனிமா கொடுக்கப்பட்டதும், நீருடன் மற்ற கழிவுகளும் வெளியேறிவிடும்.
இரண்டாவது வகை ‘ரெட்டென்ஷன் எனிமா’ (Retention enema) எனப்படும். இந்த எனிமாவும் கழிவுகளை வெளியேற்றுவதற்காகத் தான். ஆனால், இந்தத் திரவம் உள்ளே செலுத்தப்பட்டுச் சிறிது நேரம் உள்ளே நிறுத்தப்படும். இதன்மூலம், அந்தத் திரவத்தில் உள்ள தாதுஉப்புகள் உள்ளே இழுத்துக் கொள்ளப்படும். ஆனால், தொடர்ந்து இப்படிச் செய்வதால் ஆசனவாயில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுகின்றன.
மூன்றாவது வகை ‘பேரியம் எனிமா’ (Barium enema). எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் எடுத்து, குடலின் உட்புறம் ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா என்பதைப் பார்க்கும் முன்பு குடலைச் சுத்தம் செய்வதற்காக இந்த எனிமா கொடுக்கப்படுகிறது.

எனிமாவுக்கான மருத்துவப் பொருள்கள்
சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலும் வெந்நீர் மட்டுமே உபயோகிக்கப் படுகிறது. சமயங்களில், மூலிகை எண்ணெய்யோ நெய்யோ உபயோகிக்கலாம்.
எனிமாவுக்கு முன்...
எனிமா கொடுப்பதற்கு முந்தைய தினம் மருத்துவர் கூறும் உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். முடிந்தால், ஏதேனும் பழங்கள், காய்கறிகள் மட்டும் சாப்பிட்டு ஒரு நாள் இருக்கலாம். வீட்டில் எடுத்துக்கொள்வதாக இருந்தால், முதலில் வயிற்றில் ஏதேனும் இயக்கம் இருக்கிறதா எனச் சோதிக்க வேண்டும். நம் உடலில் வாயு பிரிந்தால், இந்த இயக்கம் இருக்கிறது என்று அறிந்துகொள்ளலாம்.
அடிக்கடி எனிமா எடுத்துக்கொள்வது சரியா?
குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் குடலைச் சுத்தம் செய்வதற்காக எனிமா எடுத்துக்கொள்வது தவறு அல்ல. ஆனால், அடிக்கடி எடுத்துக்கொள்வது ஆசனவாயிலும், உள்ளே இருக்கும் திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், இந்தச் செயற்கையான சுத்திகரிப்பு முறையை முழுமையாகச் சார்ந்து இருப்பதும் தவறான பழக்கம். நமது ஆசனவாய் சுருங்கி விரியும் தன்மை உடையது. அடிக்கடி எனிமா எடுக்கும்போது இந்தத் தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால், எனிமா இல்லாமல் தானாகவே மலத்தை முழுமையாக வெளியேற்றும் திறன் பாதிக்கப்படுகிறது. முதலில் உணவுமுறை, உடற்பயிற்சி, ஓய்வு, ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கங்கள் கடைப்பிடித்து உடலைச் சுத்தமாக வைத்திருப்பதே சிறந்தது.
யாருக்கு எனிமா கொடுக்கக்கூடாது?
* மூலம் பிரச்னை உள்ளவர்கள்
* இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள்
* சிறுநீரகச் செயல் இழப்பு உள்ளவர்கள்.
* மலக்குடல் மற்றும் வயிற்றில் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள்.
இயற்கையான முறையில் உடல் கழிவுகளைச் சுத்தப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
மருத்துவர் ஆலோசனைப்படி, முதல் நாள் இரவு அல்லது காலை, ஐந்து முதல் ஏழு மணி நேரத்துக்குள் விளக்கெண்ணெய், கடுக்காய்ச் சூரணம், திரிபலாதி சூரணம் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
- ந.ஆசிபா பாத்திமா பாவா

நன்றி : டாக்டர் விகடன் - 16.04.2017
No comments:
Post a Comment