disalbe Right click

Tuesday, April 18, 2017

அடர்த்தியான புருவங்களை பெற சில டிப்ஸ்


அடர்த்தியான புருவங்களை பெற சில டிப்ஸ்

புருவம் மெலிதாக இருந்தால் கண்கள் எவ்வளவு அழகாய் இருந்தாலும் எடுபடாது. அடர்த்தியான புருவமும் இமையும் சிறிய கண்களையும் அழகாய் காண்பிக்கும். அடர்த்தியான புருவம் பெற இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள். ஏதோ ஒரு நாள் செய்து இன்னொரு நாள் செய்யாவிட்டால் எதுவுமே பலனளிக்காது. தொடர்த்து செய்யும்போது மட்டுமே எதுவும் பலன் தரும். ஆகவே விடாமல் செய்து பாருங்கள் மிக விரைவில் உங்கள் புருவம் அடர்த்தியாக மாறும்.
பால் :
மிக எளிதில் கிடைக்கக் கூடியது. ஒரு பஞ்சினால் பாலில் நனைத்து புருவத்தின் மீது தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவவும். பாலிலுள்ள வே புரோட்டின்மற்றும் கேசின் புருவ வளர்ச்சியை தூண்டும்.
கற்றாழை :
கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து புருவத்தில் த்டவ வேண்டும். காய்ந்ததும் கழுவுங்கள். கற்றாழையிலிள்ள அலோனின் என்ற பொருள் கெரட்டின் போன்றது. முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
பெட்ரோலியம் ஜெல்லி :
பெட்ரோலியம் ஜெல்லியை தினமும் இரௌ தூங்குவதற்கு புருவத்தின் மீது தடவி வர வேண்டும். இதிலுள்ள ஈரத்தன்மை புருவத்திற்கு தகுந்த ஈரப்பசையை அளித்து முடி உதிராமல் காக்கும். அடர்த்தியான புருவம் வரும் வர உபயோகப்படுத்துங்கள்.
முட்டை மஞ்சள் கரு :
முட்டையிலுள்ள மஞ்சள் கருவை நன்றாக அடித்து க்ரீம் போல் செய்து கொள்ளுங்கள். ஒரு பிரஷினால் அதனை புருவத்தின் மீது தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். மஞ்சள் கருவில் பையோடின் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு தேவையான கெரோட்டின் உற்பத்திக்கு உதவுகிறது.
வெங்காய சாறு :
வெங்காய சாற்றை ஒரு நாள் விட்டு ஒரு நாள் புருவத்தில் தடவி வாருங்கள். வெங்காயத்தில் சல்ஃபர்”, “செலினியம்அதிகம் உள்ளது. இவை கூந்தலின் வேர்க்கால்களுக்கு பலம் அளிக்கும். இதனால் உதிராத பலமான புருவம் கிடைக்கும்.
விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணயை தினமும் கண்ணிமை மற்றும் புருவத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவில் அடர்த்தியான புருவம் கிடைக்கும். இது பழமையான குறிப்பாக இருந்தாலும் மிகவும் நல்ல பலனளிக்கக் கூடியது.
நன்றி : தினகரன் நாளிதழ் - 12.04.2017 

No comments:

Post a Comment