இன்ஜி., 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டு
இன்ஜி., படிப்புக்கு,
மே, 17 முதல் விண்ணப்பிக்கலாம்.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள அரசு, தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், டிப்ளமோ மற்றும்
பி.எஸ்சி., முடித்தோர், இரண்டாம் ஆண்டு,
இன்ஜி., படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.
இதற்கான தமிழக அரசின் கவுன்சிலிங், காரைக்குடி அழகப்பா
செட்டியார் இன்ஜி., கல்லுாரி மூலம் நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில், இரண்டாம் ஆண்டு
மாணவர் சேர்க்கைக்கு, மே, 17 முதல், ஜூன், 14 வரை, http://www.accet.co.in/, http://www.accet.edu.in/
ஆகிய இணையதளங்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப
நகல்களை, ஜூன், 14, மாலை, 5:00 மணிக்குள், காரைக்குடி அழகப்ப செட்டியார் கல்லுாரி முகவரிக்கு அனுப்ப வேண்டும்
என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் கல்விமலர் – 10.05.2017
No comments:
Post a Comment