வங்கியில் மோசடி : 6 பேருக்கு சிறை
மதுரை: மதுரை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று, மோசடியில் ஈடுபட்டதாக, முன்னாள் மேலாளர் செல்வராஜ் உட்பட நால்வருக்கு ஏழு ஆண்டுகள், இருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை மேல மாசி வீதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்படுகிறது. இங்கு, 2003ல் மேலாளராக இருந்தவர் செல்வராஜ். அந்த ஆண்டில், மகால், ஐந்தாவது தெருவில் ஜவுளி நிறுவனம் நடத்துவதாக கூறி, ஐந்து பேர் வங்கியில் போலி ஆவணங்களை கொடுத்து, 26.83 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தனர்.
இது குறித்து, சி.பி.ஐ., விசாரித்து, கடன் வாங்கிய ஐந்து பேர் மற்றும் வங்கி மேலாளர் மீது வழக்கு பதிவு செய்தது.
இவ்வழக்கு மதுரை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில், இருவருக்கு தலா, ஐந்து ஆண்டுகள் சிறையும், 35 ஆயிரம் ரூபாய் அபராதமும், மேலாளர் செல்வராஜ் உட்பட நான்கு பேருக்கு தலா, ஏழு ஆண்டுகள் சிறையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 20.05.2017
No comments:
Post a Comment