எஸ்.பி.ஐ வங்கியின் அடுத்த அதிரடி..!
அதிர்ச்சி அடையப்போகும் வாடிக்கையாளர்கள்..!
ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும்போது, 25 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த கட்டண நடைமுறை ஜுன் 1ஆம் தேதி முதல் வருகிறது.
வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் மெய்ட்டன் செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே, அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தது எஸ்.பி.ஐ. குறிப்பாக, பெருநகரங்களில் இருப்பவர்கள் ரூ.5,000 வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்றது எஸ்.பி.ஐ. அதேபோல் நகரம் முதல் கிராமம் வரை ஒவ்வொரு பகுதிக்கும், ஒரு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது எஸ்.பி.ஐ.
இதனால் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இதையடுத்து, அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அவற்றையெல்லாம் எஸ்.பி.ஐ கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், அடுத்த அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது எஸ்.பி.ஐ. அதன்படி, வருகின்ற ஜுன் 1ஆம் தேதி முதல் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-களில் இருந்து பணம் எடுக்கும்போது, அதன் வாடிக்கையாளர்களுக்கு 25 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ அதிர்ச்சி கிளப்பியுள்ளது. அதேபோல், பழைய மற்றும் கறைபடிந்த நோட்டுகளை மாற்றும் போது 5,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கு, கட்டணம் விதிக்கப்படும் என்றும் எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.
இரா. குருபிரசாத்
நன்றி : விகடன் செய்திகள் - 11.05.2017
No comments:
Post a Comment