'போக்குவரத்து விதி மீறினால் 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து!'
'போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளின், 'லைசென்ஸ்' கோர்ட் உத்தரவுப்படி ரத்து செய்யப்படும்' என, போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
நாள்தோறும் விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. சாலை பராமரிப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும், போக்குவரத்து விதிகளை மதிக்காததால் தான் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இதை கருதி, உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு கமிட்டி, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின், 'லைசென்ஸ்'களை தற்காலிகமாக ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர்.
போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு கமிட்டி உத்தரவுப்படி, போக்குவரத்து விதிகளை மீறுவோர் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றனர். அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னல்களை மதிக்காமல் செல்வது, மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது, அதிக பாரம் ஏற்றி செல்பவர்கள் மீது, மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து, 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போலீசார் கூறினர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 14.05.2017
No comments:
Post a Comment