கண்மாயில் சிறுவன் பலி, கலெக்டருக்கு நோட்டீஸ்!
மதுரை:மதுரை அவனியாபுரம் கண்மாயில் பள்ளி சிறுவன்
மூழ்கி பலியானதற்கு இழப்பீடு கோரி தாக்கலான வழக்கில், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜெய்ஹிந்த்புரம் பாதுஷா தாக்கல் செய்த மனு:
எனது மகன் முகமது ஷபிர்,10, லட்சுமிபுரம் பகுதி பள்ளியில் 4ம் வகுப்பு படித்தார். பிப்.,18 ல் பள்ளி சென்றார். வீடு திரும்பவில்லை.
அவனியாபுரம் கழிவுநீர் கண்மாயில் தவறி விழுந்து இறந்தார்.
எனது மகன் இறப்பிற்கு
காரணம், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கண்மாய்தான்.
அதன் அருகில் அறிவிப்பு பலகை வைக்கவில்லை. வேலி, சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. அங்கு குப்பைகளை
குவித்து வைக்கின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ளவில்லை.
எனது மகனின் இறப்பிற்கு தகுந்த இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனு செய்திருந்தார்.கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்ட நீதிபதி வி.பார்த்திபன், விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 03.05.2017
No comments:
Post a Comment