வீட்டு மனை தொடர்பான பத்திரங்களை பதியாதீர்!
மனை விற்பனையை பதிய வேண்டாம், சார் - பதிவாளர்களுக்கு உத்தரவு
'வீட்டுமனை மற்றும் மனைப்பிரிவு தொடர் பான விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய வேண்டாம்' என, சார் பதிவாளர்களுக்கு, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
அங்கீகாரமில்லா மனை விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய, சென்னை உயர் நீதி
மன்றம், 2016, செப்., 9ல், தடை விதித்தது. இது மே, 12ல், தளர்த்தப்பட்டது. அங்கீகாரமில்லா மனை மறுவிற்பனையை மட்டும் அனுமதிக்கும் வகையில், தமிழக அரசின், 2016 அக்., 20ல், அரசாணைப்படி, பத்திரப்பதிவு செய்ய உயர்நீதி மன்றம் அனுமதித்தது. இதன்படி, தமிழக அரசு அறிவித்துள்ள மனைகள் வரன்முறைத் திட்டத் தைச் செயல்படுத்த, நீதி மன்றம் அனுமதி அளித்தது. இருப்பினும், மனை விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய, சார் - பதி வாளர்கள் மறுத்து வருகின்றனர். இதனால், சார் - பதிவாளர்களுடன், மக்கள் வாக்கு வாதத்தில் ஈடு படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்படி, மனை மறு விற்பனை பத்திரங்களை பதிவு செய்யலாம். ஆனால், அந்த உத்தரவைஅமல்படுத்துவதில், சட்ட வல்லுனர்கள் இரு வேறு கருத்துகளை தெரிவித் துள்ளதால், அமல்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டுள் ளது.
எனவே, 'தற்போதைக்கு, மனைப்பிரிவு, மனை கள் தொடர்பத்திரங்களை பதிவு செய்ய வேண்டாம்' என, சார் - பதிவாளர்களுக்கு, மேலதிகாரிகள் உத்தரவு இட்டுள்ளனர். வழக்கின் இறுதி விசாரணை நாளான, ஜூன், 12 வரை இதே நிலை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.உயர் நீதிமன்றம் தடையை தளர்த்திய பிறகும், மறு விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய, சார் - பதிவாளர்கள் மறுப்பது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 25.05.2017
No comments:
Post a Comment