disalbe Right click

Tuesday, May 9, 2017

மனைப்பிரிவுகள் வரன்முறையில் சிக்கல்:அதிகாரிகள் குழப்பம்

மனைப்பிரிவுகள் வரன்முறையில் சிக்கல்:அதிகாரிகள் குழப்பம்
அங்கீகாரமில்லாத மனைகள் போல, மனைப் பிரிவுகளை வரன்முறை செய்யவும், தமிழகஅரசு விதிமுறைகளை அறிவித்துள்ளது. ஆனால், அவற்றை அமல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும் என, நகரமைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 
தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறை செய்யவும், விவசாய நிலங்களை, வேறு தேவைகளுக்கு மாற்றுவதை கட்டுப்படுத்தவும், தமிழக அரசு, சமீபத்தில் விதிமுறை களை அறிவித்தது. இவற்றில், தனி மனைகளுக்கான வரன்முறை விதிகள் போல, மனைப்பிரிவுகளை வரன்முறை படுத்துவதற்கான விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.
விதிகள் என்ன?
 மூன்றில் ஒரு பங்குக்கு குறைவான மனைகள் விற்கப்பட்ட, மனை பிரிவுகளை வரன்முறைப் படுத்தவேண்டும் எனில், அவை, வளர்ச்சி விதிகள், முழுமை திட்ட நில பயன்பாட்டு விதிகள் மற்றும் புதிய மனைப்பிரிவு அனுமதி விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்
மூன்றில் ஒரு பங்குக்கு மேல்,இரண்டு பங்கு மனைகள் விற்கப்பட்ட மனைப்பிரிவு கள் எனில், முடிந்த அளவு வளர்ச்சி விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்
திறந்தவெளி நிலம் ஒதுக்க வேண்டும்; முடியாத பட்சத்தில், வழிகாட்டி மதிப்பின்படி, அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். நீர் வழித்தடங்களை ஆக்கிரமிக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் கணக்கிட வேண்டும்
மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் மனைகள் விற்கப்பட்டு இருந்தால், மனைப்பிரிவை முடிந்த வரை உள்ளது உள்ளபடி, வரன்முறை செய்யலாம்
விற்கப்படாத மனைகளை, சாத்தியக்கூறு அடிப் படையில் இணைப்பதால், திறந்த வெளி இடங்கள், பொது வசதிகளை ஏற்படுத்தலாம். இதிலும், நீர் வழித்தடங்களை ஆக்கிரமிக்கவில்லை; விவசாய நிலங்கள் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
தீர்வு எப்போது?
இது குறித்து, நகரமைப்பு வல்லுனர் கள் கூறியதாவது:இந்த விதிமுறை அனைத்தும், புதிய மனைப்பிரிவுகளுக்கு அனுமதி பெற கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளாகவே உள்ளன. இதனால், பாதி விற்பனை நடந்த மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதில், பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படும்.
சி.எம்.டி.ஏ., மற்றும் நகரமைப்புத்துறை அதிகாரிகள், இதை எப்படி அமல்படுத் துவர் என்பது குழப்பமாக உள்ளது. இதற்கான நடை முறை விதிகள், விரைவில் அறிவிக்கப்படும். அப்போதுதான், இந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 
நன்றி : தினமலர் நாளிதழ் - 09.05.2017


No comments:

Post a Comment