போலி பத்திரம் தயாரிப்பு-குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை
போலி பத்திரம்
தயாரிப்பு-குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை
வழக்கின் சுருக்கம்: காளையார்கோவில்
மதுரையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமாக கடைகள்
உள்ளது. அதில் ஒரு கடையை (1) ஜான்போஸ்கோ என்பவருக்கு வாடகைக்கு
பேசி ஐந்து வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்த ஒப்பந்தம் 02.04.2007
அன்று முடிவடைந்த நிலையில்
ஆரோக்கியம் கடையை காலிசெய்து தருமாறு (1) ஜான்போஸ்கோவிடம் கேட்கிறார். ஆனால் அவர் (2) ரத்தினவேல்சாமி மற்றும் (3) ஆ. சோமன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு கூட்டுச்சதி செய்து மீண்டும்
ஒரு வாடகை ஒப்பந்தத்தை 13.06.2007 அன்று ஆரோக்கியம்
எழுதிக் கொடுத்தது போல ஒரு பத்திரத்தை காட்டுகிறார். அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியம்
நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். வழக்கில் பல குளறுபடிகள் இருந்ததால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
(நேரடியாக வழக்கை படித்தால்
புரியாது. அதனால் இந்த வழக்குச் சுருக்கம்)
இப்ப உள்ள போய் பாருங்க!
....அன்புடன் செல்வம் பழனிச்சாமி
நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் -
2 சிவகங்கை
முன்னிலை : திரு. வீ
.வெங்கடேசபெருமாள் பி.எல்
நீதித்துறை நடுவர் எண்- 2
சிவகங்கை
2016 ம் ஆண்டு ஜனவரி
மாதம் 28 ம் நாள் வியாழக்கிழமை
திருவள்ளுவராண்டு 2044 மன்மதவருடம் தை மாதம் 14 ம் நாள்
ஆண்டு பட்டிகை வழக்கு எண் 1 /
2013
குற்றம் முறையிடுபவர் :
அரசுக்காக
சார்பு ஆய்வாளர்
மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையம்
குற்ற எண் 11/2011
குற்றம் சாட்டப்பட்டவர் :
1. ஜான்போஸ்கோ (வயது 47-16)
த-பெ சவரிமுத்து
3811-1¸ திருநகர்
காளையார்கோவில்
சிவகங்கை
2. ரத்தினவேல்சாமி (வயது 60-16)
த-பெ சாமியாபிள்ளை
மறவமங்கலம்
3. ஆ. சோமன் (வயது 76-16)
த-பெ ஆண்டிகோனார்
மேலத்தெரு
மறவமங்கலம்
வழக்கிலிருந்து முக்கிய
குறிப்புகள்:
குற்றம் முறையிட்டது : 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச
பிரிவுகள் 120(பி)¸ 468¸
471 ன் கீழ் குற்றம்
முறையிடப்பட்டுள்ளது.
குற்றம் வனையப்பட்டது : 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச
பிரிவுகள் 120(பி)¸ 468¸
471 ன் கீழ் குற்றம் வனையப்பட்டுள்ளது.
தீர்மானம் : இறுதியில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதச
பிரிவுகள் 120(பி)¸ 468¸
471 ன் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக அரசு
தரப்பில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என தீர்மானம்.
தீர்ப்பு : இறுதியில் அரசு தரப்பு 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச
பிரிவுகள்120(பி)¸ 468¸
471 ன் கீழான குற்றச்சாட்டுக்களை
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்காததால் 1 முதல் 3 எதிரிகள் இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ்
குற்றவாளிகள் இல்லை எனத் தீர்மானித்து 1 முதல் 3 எதிரிகளை கு.வி.மு.ச. பிரிவு 248(1) ன் கீழ் விடுதலை செய்து இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
1. குற்ற இறுதி அறிக்கையின் சுருக்கம்
இவ்வழக்கின் வாதியான ஆரோக்கியம்
என்பவர் தனக்கு பாத்தியமான காளையார்கோவில் மதுரையிலிருந்து தொண்டி செல்லும்
சாலையில் ளு.யு. பில்டிங்கில் உள்ள கடையில் 6 வது கடையான கதவு எண். 7/1யு என்ற கடையை 1 வது குற்றம்
சாட்டப்பட்டவருக்கு கடந்த03.04.2001 ல் வாடகைக்கு
விட்டு ரூ.10¸000- முன்பணம் பெற்று
மாத வாடகை ரூ.500- என பேசி ஐந்து
வருடங்களுக்கு வாடகை ஒப்பந்தம் கடந்த 02.04.2007 ல் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் கடையை காலி செய்ய
சொன்ன போது குற்றம் சாட்டப்பட்டவர் ஏமாற்றி மோசடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் 2¸ 3 குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சதி செய்து 13.06.2007
ம் தேதி சாட்சி ஆரோக்கியம் 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு வாடகை ஒப்பந்தம் எழுதிக்
கொடுத்ததாகவும்¸ ரூ.40¸000- முன்பணம் பெற்றுக் கொண்டதாகவும்¸ ஒரு போலியான வாடகை ஒப்பந்தத்தை தயார் செய்து அதன் நகலை வாதியிடம்
கொடுத்து வாதியின் கடையை காலி செய்ய மறுத்ததாகவும்¸ தன்னிடம் உள்ள அசல் வாடகை ஒப்பந்தத்தை ஆஜர் செய்ய நீதிமன்றம் மூலம்
சம்மன் அனுப்பியும்¸ சம்மனை பெற்றும் அசல் ஆவணத்தை ஆஜர்
செய்யாமல் இருந்த குற்றத்திற்காக 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றம்
புரிந்ததாகக் கூறி குற்ற முறையிடுபவரால் குற்ற இறுதி அறிக்கை தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
2. 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கின் ஆவணங்கள் அனைத்தும்
கு.வி.மு.ச.பிரிவு 207ன் கீழ் இலவசமாக வழங்கப்பட்டது.
3. போதிய அவகாசம் கொடுத்து குற்றம்
சாட்டப்பட்டவர்களிடம் குற்றம் பற்றி விளக்கிக் கூறி வினவப்பட்டபோது அவர்கள்
குற்றத்தை மறுத்துள்ளார்கள். ஆவணங்களின் அடிப்படையில் 1 முதல் 3 குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இதச
பிரிவுகள் 120(பி)¸ 468¸
471 ன் கீழ் குற்றச்சாட்டுகள் வனைந்து
விளக்கி வினவிய போது 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று
தெரிவித்துள்ளார்கள்.
4. அரசு தரப்பில் அ.சா.1 முதல் 9 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
அ. சா ஆ. 1 முதல் அ. சா ஆ. 3 வரை சான்றாவணங்கள் குறியிடப்பட்டன.
அரசு தரப்பு சாட்சிகளின்
சுருக்கம் பின்வருமாறு.
அ.சா.1 கொடுத்த புகார் அ.சா.ஆ.1 ஆகும். அ.சா.1 கொடுத்த புகாரைப்
பெற்று சார்பு ஆய்வாளர் பதிவு செய்த முதல் தகவல்
அறிக்கை அ.சா.ஆ.2 ஆகும். அ.சா.1 தனது சாட்சியத்தில் 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு பில்டிங் தொழில் செய்வதற்காக
காளையார் கோவிலில் உள்ள தனக்குச் சொந்தமான 6 கடைகளில் 1 கடையை 5 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.10¸000 முன்பணமாக பெற்று¸ மாதவாடகையாக ரூ.500- பேசி கடையை வாடகைக்கு விட்டதாகவும்¸ சிறிது காலம் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர் வாடகை கொடுத்ததாகவும்¸ பின்னர் 5 வருட ஒப்பந்தத்தின் முடியும்
தருனமான 2007 ம் வருடம் அ.சா.1 ரூ.40¸000- முன் பணம்
பெற்றுக்கொண்டு மாதவாடகையாக ரூ.600- நிர்ணயம் செய்தது போல அ.சா.1ன் பெயரில் போலி பத்திரம் தயார் செய்ததாகவும் கூறி சாட்சியம்
அளித்துள்ளார். அ.சா.2 முதல் அ.சா.7 வரையானவர்கள் தங்களது சாட்சியத்தில் அ.சா.1 ன் சாட்சியத்தை ஒத்து சாட்சியம் அளித்துள்ளார்கள். அ.சா.8 புலன் விசாரணை அதிகாரி தனது சாட்சியத்தில் வழக்கின் புலன் விசாரணை
முடித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாக
சாட்சியம் அளித்துள்ளார்.
5. பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
பாதகமான சங்கதிகளை குறித்து கு.வி.மு.ச.313(1)(ஆ)ன் கீழ் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எடுத்துக்கூறி விளக்கி வினவிய போது
அரசுத்தரப்பு சாட்சியம் பொய் என்றும் தங்கள் தரப்பில் விசாரிக்க சாட்சிகள் உண்டு
என்றும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளாக
யாரையும் முன்னிட்டு விசாரணை செய்யவில்லை.
6. இவ்வழக்கில் தீர்மானிக்க வேண்டிய பிரச்சினை
யாதெனில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ்
சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசுத் தரப்பால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு
நிரூபிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதுதான்.
7. பிரச்சனை
கற்றறிந்த அரசு தரப்பு வழக்கறிஞர்
வாதிடும் போது¸ புகார்தாரரும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவரும் கடை உரிமையாளர்¸ வாடகைதாரர் எனவும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் ஏதோ புகார்தாரர் அவருக்கு வாடகை
ஒப்பந்தம் முடிந்த பிறகு 13.06.2007 ம் தேதி
புகார்தாரர் ரூ.40¸000- முன்பணமாக
பெற்றுக் கொண்டு 5 வருடங்களுக்கு வாடகை ஆவணம் செய்து
கொடுத்ததாக புகார்தாரரின் கையெழுத்தை போலியாக இட்டு¸ போலி வாடகை ஒப்பந்த பத்திரம் தயாரித்துள்ளார்அந்த போலி
பத்திரத்திற்கு 2 மற்றும் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியாக கையொப்பம் இட்டு மோசடி செய்து
போலியான பத்திரத்தை தயாரித்து அதனை உண்மை போல் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது
அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியத்தின் மூலம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு
நிரூபிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
8. கற்றறிந்த குற்றம்
சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிடும் போது¸ அரசு தரப்பு சாட்சிகளில் அ.சா.1 முதல் அ.சா.6 வரையான சாட்சிகளில் அ.சா.1 புகார்தாரரின் மகன் அ.சா.2 ஆவார் என்றும்¸ அ.சா.3 முதல் அ.சா.6 வரையான சாட்சிகள் அ.சா.1¸ அ.சா.2 ன் நெருங்கிய உறவினர்கள் மற்றும்
ஒரே ஊர்க்காரர்கள் என்றும்¸ வாடகைதாரான 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் வாடகைதாரர் என்ற நிலையில்
புகார்தாரர்/கட்டிட உரிமையாளரிடம் சில பிரச்சினைகள் இருந்ததைப் பயன்படுத்தி 1 வது குற்றம் சாட்டப்பட்டவரை பழிவாங்க வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தில்
இந்த பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்¸ அ.சா.7¸ அ.சா.9 ஆகியோரின் சாட்சியத்தின் படி புகார்தாரரின் உறவினரான சேம்பர் என்ற
ஊரைச் சேர்ந்த அருளானந்து என்பவர் மூலம் பத்திரம் வாங்கப்பட்டு
தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்¸ அந்த அருளானந்து அ.சா.1 ன் உறவினர் என அ.சா.1 தனது சாட்சியத்தில் கூறி உள்ளதாகவும்¸ மேலும்¸ அந்த பத்திரம் போலிப் பத்திரம்
என்றால் அந்த பத்திரத்தை வாங்கியவரை ஏன் சாட்சி;யான விசாரணை செய்யவில்லை என்பதற்கான விளக்கம் அரசு தரப்பில் இல்லை
எனவும்¸ உண்மையில் போலி பத்திரம் எதுவும் 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் தயார் செய்யவில்லை எனவும்¸ 2¸3 வது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதில் சாட்சிக் கையொப்பம்
செய்யவில்லை எனவும்¸ புகார்தாரரே ஏதோ பத்திரத்தை தயார்
செய்துவிட்டு இந்த 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் மீது
பொய்யாக வழக்கு கொடுத்து இருப்பதாகவும்¸ உண்மையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி பத்திரம் தயார்
செய்தார்கள் என்பது அரசு தரப்பு தகுந்த ஆவணம் மற்றும் சாட்சியம் மூலம் நிரூபிக்க
தவறி உள்ளது எனவும்¸ அதே போல் சட்ட அறிவிப்பு 19.04.2010
ம் தேதி புகார்தாரருக்கு கிடைத்து
உள்ளது. புகார்தாரர் 30.04.2010 ம் தேதியில் மறு
பதில் அறிவிப்பு அனுப்பி உள்ளார். ஆனால் அதிலிருந்து 6 மாதங்களுக்கு மேல் காலதாமதமாக ஏன் புகார் கொடுத்தார்¸ 6 மாதங்கள் காலதாமதமானதற்கு சரியான விளக்கம் இல்லை எனவும்¸எனவே தகுந்த சாட்சியங்கள் மூலம் 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் தான் புகார்தாரருடைய கையெழுத்தை இட்டு
போலியான 13.06.2007 ம் தேதியிட்ட ஒரு
வாடகை ஒப்பந்த பத்திரத்தை தயார் செய்தார் என்பதையோ¸ 2¸ 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதற்கு சாட்சிக் கையெழுத்து இட்டார்கள்
என்பதையோ அரசு தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறிவிட்டதாக
வாதிட்டார்.
9. புகார்தாரருக்கு பாத்தியமான
மதுரையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் காளையார்கோவில் என்ற ஊரில் உள்ள ளு.யு.
பில்டிங்ஸ் என்ற கடைகளில் 6 வது கடையான கடை எண். 7/1யு என்ற கடையை புகார்தாரர் 03.04.2001 ம் தேதியில் ரூ.10¸000- முன்பணம் பெற்றுக் கொண்டு மாத வாடகையாக ரூ.500- என பேசி 5 வருடங்களுக்கு அதாவது 02.04.2005
ம் தேதி வரை 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாடகைக்கு விட்டார் என்பது இரு
தரப்பிலும் ஒத்துக் கொள்ளப்படுகிறது. புகார்தாரர் தரப்பில் வாடகை ஒப்பந்தம்
முடிந்த பிறகு 13.06.2007 ம் தேதியில்
புகார்தாரருக்கு ரூ.40¸000- முன்பணம்
வழங்கியது போலும்¸ 2¸ 3 குற்றம்
சாட்டப்பட்டவர்கள் அதற்கு சாட்சிக் கையெழுத்து இட்டது போல் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட்டுச்
சதி செய்து புகார்தாரரின் கையெழுத்தை போலியாக இட்டு போலியாக ஒரு வாடகை ஒப்பந்தம்
எழுதி¸ அதனை உண்மை போல் பயன்படுத்தி
உள்ளார்கள் என்பது குற்றச்சாட்டாகும்.
10. கற்றறிந்த
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிடும் போது¸ வாடகை ஒப்பந்த பத்திரம் எதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
தயாரிக்கவில்லை என்றும்¸ இப்படி ஒரு வாடகை ஒப்பந்தப்
பத்திரத்தை புகார்தாரர் தான் தயாரித்தார் என குறிப்பிடுகிறார். 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் புகார்தாரருக்கு அனுப்பிய சட்ட
அறிவிப்பான அ.சா.ஆ.3 ல் தெளிவாக¸
"எமது கட்சிக்காரர் தங்களின்
வாடகைதாரராக யாதொரு காலதாமதமும் இன்றி முறையாக மாதாந்திர வாடகையை செலுத்தி
அனுபவித்து வருகிறார் என்றும்¸ 3.04.2002 ம் தேதிய வாடகை உடன்படிக்கை முடிந்த பிறகு தொடர்ந்து மேற்படி
சொத்தில் எமது கட்சிக்காரர் வாடகைதாரராக இருந்து தொழில் செய்ய தாங்களும் சம்மதித்து
மீண்டும் 13.06.2007 ம் தேதி வாடகை
உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு கூடுதல் அட்வான்சாக ரூ.40¸000-
ம் அட்வான்சாக பெற்றுக் கொண்டு
மொத்த அட்வான்ஸ் தொகை ரூ.50¸000- என்றும்¸ மேற்படி உடன்படிக்கை தேதியில் இருந்து மாத வாடகை ரூ.600- என நிர்ணயம் செய்து அதன்படி எமது கட்சிக்காரர் தங்களின்
வாடகைதாரராக இருந்து தொடர்ந்து மேற்படி சொத்தில் தொழில் செய்து வருகிறார்"
என்று குறிப்பிட்டு
அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு 1 வது குற்றம்
சாட்டப்பட்டவர் புகார்தாரருக்கு அனுப்பிய சட்ட அறிவிப்பில் தெளிவாக 13.06.2007
ம் தேதியில் புகார்தாரருக்கும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே வாடகை ஒப்பந்தம்
செய்யப்பட்டது என குறிப்பிடுகிறார். எனவே வாடகை ஒப்பந்தமே இல்லை¸ அதனை புகார்தாரர் தான் தயாரித்துள்ளார்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதுவும் தெரியாது என்ற கற்றறிந்த
எதிர் தரப்பு வழக்கறிஞரின் வாதம் ஏற்புடையதாக இல்லை என இந்நீதிமன்றம் கருதுகிறது.
11. புகார்தாரருக்கும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே கடை உரிமையாளர் மற்றும்
வாடகைதாரர் என்ற நிலையில் பிரச்சினை இருந்து வந்ததும்¸ இது தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடரப்பட்டதும் சாட்சிகளின்
சாட்சியத்திலிருந்து அறிய முடிகிறது. புகார்தாரர் 13.06.2007 ம் தேதியிட்ட வாடகை உடன்படிக்கை பத்திரத்தில் தான் கையெழுத்து
இடவில்லை என கூறுகிறார். அந்த வாடகை உடன்படிக்கை ஒப்பந்தத்தின் நகல் காளையார்
கோவில் காவல் நிலையத்தில் 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் மீது
புகார்தாரர் புகார் கொடுத்த போது தான் புகார்தாரரே அந்த வாடகை உடன்படிக்கை
பத்திரத்தையே பார்த்தார் என குறிப்பிடப்படுகிறது. 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நிலையத்தில் கொடுத்த அந்த நகலை
ஏன் புலன் விசாரணை அதிகாரி அந்த காவல் நிலையத்தின் உரிய அதிகாரி மூலம் கைப்பற்றி
இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்பதற்கோ¸ அந்த காவல் நிலைய அதிகாரி ஏன் சாட்சியாக விசாரணை செய்யப்படவில்லை
என்பதற்கோ அரசு தரப்பில் விளக்கம் இல்லை. அதே போல் போலியாக தயாரிக்கப்பட்டதாக
சொல்லப்படும் அசல் பத்திரம் 1 வது குற்றம்
சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரிடம் இருந்ததால் கைப்பற்ற முடியவில்லை என்ற புலன்
விசாரணை அதிகாரியின் சாட்சியம் ஏற்கும்படி இல்லை. சட்ட நடைமுறைப்படி யாரிடம் அசல்
பத்திரம் உள்ளதோ அவருக்கு முறையாக சம்மன் அனுப்பி அந்த ஆவணத்தை பெறுவதற்கு முயற்சி
செய்ய புலன் விசாரணை அதிகாரி தவறி உள்ளார். அதே போல் அசல் ஆவணம் இல்லாத நிலையில்
நகல் ஆவணத்தை காளையார்கோவில் காவல் நிலையத்திலிருந்து பெற்று அதனை அறிவியல்
பூர்வமாக சோதனைக்கு அனுப்பி உண்மையில் அந்த பத்திரத்தில் உள்ளது புகார்தாரரின்
கையெழுத்து தானா இல்லையா என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறி உள்ளது.
12. ஒரு நபர் ஒரு
பத்திரத்தில் கையெழுத்து இட்டார் என்பதை அந்த நபரின் சாட்சியத்தின் மூலமும்¸ அதனை கண்ணுற்ற பிற நபர்களின் சாட்சியத்தைக் கொண்டு நிரூபிக்கலாம்.
ஆனால் ஒரு பத்திரத்தில் ஒரு நபர் கையெழுத்து இடவில்லை என்பதை பிற சாட்சிகளின்
சாட்சியத்தின் மூலம் அறிய இயலாது. பிற சாட்சிகள் கூறும் சாட்சியம் அந்த நபர்
கையெழுத்து இடவில்லை என அந்த நபர் தான் தெரிவித்தார் என்று கேள்விநிலை
சாட்சியமாகத்தான் இருக்க முடியும்.இவ்வழக்கிலும் புகார்தாரர் தான் 13.06.2007
ம் தேதிய உடன்படிக்கையில்
கையெழுத்து இடவில்லை என்பதை அ.சா.2 முதல் அ.சா.6 வரையான சாட்சிகள் சொல்வது புகார்தாரர் சொல்வதைக் கேட்டு சொல்லும்
சாட்சியம் ஆகும். அந்த சாட்சியங்களை வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது. அதே போல்
அ.சா.1 க்கும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கும் கடை
உரிமையாளர்¸ வாடகைதாரர் என்ற நிலையில் பல
பிரச்சினைகள் இருக்கும் போது புகார்தாரர் கூறும் சாட்சியத்தை மட்டும் அடிப்படையாக
வைத்து புகார்தாரரின் கையெழுத்தை 1 வது குற்றம்
சாட்டப்பட்டவர் போலியாக இட்டார் என்று ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அரசு தரப்பு
அசல் ஆவணத்தை கைப்பற்றியோ அல்லது உரிய நகலை எடுத்து அறிவியல் பூர்வமாக குற்றம்
சாட்டப்பட்டவர்களின் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிஉள்ளது. அதே போல் 19.04.2010
ம் தேதியிட்ட வழக்கறிஞர் அறிவிப்பை
பெற்ற புகார்தாரர் 5 மாதம் காலதாமதமாக 12.09.2010
ம் தேதியில் முதன் முதலில் மாவட்ட
காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளதாக சாட்சியம்
அளித்துள்ளார்.பத்திரம் போலியானது என்று தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்காமல் ஏன் 5 மாதம் காலதாமதமாக புகார் கொடுத்துள்ளார் என்பதற்கான சரியான
விளக்கம் அரசு தரப்பில் இல்லை. அதே போல் அ.சா.7 தனது சாட்சியத்தில் போலியாக தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் வாடகை
ஒப்பந்தப் பத்திரம் எழுதப்பட்ட பத்திரம் அருளானந்து¸ சேம்பர் என்ற பெயரில் வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த
சேம்பர் என்ற ஊரைச் சேர்ந்த அருளானந்து என்பவர் அ.சா.1 ன் உறவினர் என அ.சா.1 தனது சாட்சியத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். போலியாக
தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் வாடகை ஒப்பந்த பத்திரம் எழுதப்பட்ட பத்திரம்¸ அ.சா.1 ன் உறவினர் பெயரில்
வாங்கப்பட்டிருப்பது இந்நீதிமன்றத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் புகார்தாரரின் கையெழுத்தை போலியாக
இட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம் தயாரித்துள்ளார் என்பதையோ¸ 2¸ 3 வது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த பத்திரத்தில் சாட்சியாக
கையெழுத்து செய்தார்கள் என்பதையோ அரசு தரப்பு தகுந்த ஆவணம் மற்றும் நேரடி
சாட்சியம் அல்லது அறிவியல் பூர்வ சாட்சியம் மூலம் நிரூபிக்க தவறிவிட்டது என
இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது. மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது
இ.த.ச பிரிவுகள் 120(பி)¸ 468¸
471 ன் கீழ் சுமத்திய
குற்றச்சாட்டுக்களை அரசு தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத்
தவறியுள்ளதாக என இந்த பிரச்சினையை இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.
இறுதியாக அரசுத்தரப்பு 1 முதல் 3 எதிரிகள் இ.த.ச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ்
குற்றவாளிகள் இல்லை எனத் தீர்மானித்து கு.வி.மு.ச. பிரிவு 248(1)ன் கீழ் 1 முதல் 3எதிரிகளை விடுதலை செய்து இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
17.05.2017
நன்றி : http://www.tamiljudgements.org
No comments:
Post a Comment