தூக்கு!
மாணவி 'நிர்பயா' வழக்கில் நால்வருக்கு...
சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
புதுடில்லி:நாட்டையே உலுக்கிய, மருத்துவ மாணவி, 'நிர்பயா'வை ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்து, தெருவில் வீசியெறிந்து கொலை செய்த வழக்கில், நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.
- டில்லியைச் சேர்ந்த, 23 வயது மருத்துவ மாணவி ஒருவர், கடந்த, 2012, டிச., 16 இரவில், தன் நண்பருடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
- அப்போது, பஸ் டிரைவர் உட்பட ஆறு பேர், இவ்விருவரையும் தாக்கியுள்ளனர்.
- மேலும், ஓடும் பஸ்சில், மாணவியை, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், இரும்பு கம்பியால் அவருடைய பிறப்புறுப்பை தாக்கினர்.
- பின், இருவரையும் பஸ்சில் இருந்து துாக்கி வீசியது அந்த கும்பல்.
கொந்தளிப்பு
- இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவி, டில்லியிலும், பின், சிங்கப்பூர் மருத்துவமனை யிலும் சேர்க்கப்பட்டார்.
- ஆனால், 2012, டிச., 29ல் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
- கொடூரமான முறையில் நடந்த இந்த சம்பவம், நாடு முழுவதும் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
- மாணவிக்கு, 'நிர்பயா' எனப்படும், பயமறியாதவள் என்று பெயரிட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக மிகப் பெரிய அளவில் டில்லி மற்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.
- இந்த சம்பவத்தைத் தொடர்ந்தே, பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் அளிக்கும், 'நிர்பயா நிதி' உருவாக்கப்பட்டது.
- இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஒரு சிறுவன் உட்பட, ஆறு பேரை கைது செய்தனர்.
- இதில், பஸ் டிரைவர் ராம் சிங், சிறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
- சிறுவனுக்கு 3 ஆண்டு:இந்த வழக்கில் தொடர்பு டைய சிறுவன் மீதான வழக்கு சிறார் கோர்ட்டில் நடந்தது.
- அதிகபட்ச தண்டனையாக, சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அவனை, மூன்றாண்டு அடைப் பதற்கு, 2016, ஆகஸ்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
- இதனிடையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள அக்ஷய், பவன், வினய் சர்மா, முகேஷ் ஆகியோ ருக்கு மரண தண்டனை விதித்து, டில்லி கோர்ட், 2013ல் தீர்ப்பு அளித்தது.
- இந்த தண்டனையை, டில்லி ஐகோர்ட், 2014ல் உறுதி செய்தது.
- இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷண் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்து, நேற்று தீர்ப்பு அளித்தது.
அரிய வழக்கு
- 'டில்லி ஐகோர்ட் உறுதிசெய்துள்ள, மரண தண்டனையை உறுதி செய்கிறோம்' என, சுப்ரீம் கோர்ட் அமர்வு தன் தீர்ப்பில் கூறியுள்ளது.
- 'நிர்பயா பலாத்கார, கொலை வழக்கு, அரிதிலும் அரிதான வழக்கு.
- அதனால், இந்த வழக்கில் குற்றவாளி களுக்கு மிகவும் அதிகபட்ச தண்டனை தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
- அவர்களுக் கான மரண தண்டனையை உறுதி செய்கிறோம்' என, சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து, நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் கூறுகையில்,
- ''எங்களுடைய மகள் வழக்கில் நல்ல தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது; இனி நிம்மதியாக துாங்குவோம்,'' என்றார்.
வழக்கு கடந்து வந்த பாதை
- 2012, டிச., 16: டில்லியில், 23 வயது மருத்துவ மாணவி, 'நிர்பயா' நண்பருடன் இரவில், தனியார் பஸ்சில் பயணம் செய்த போது, ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, ஆயுதங்களால் தாக்கப்பட்டு, பஸ்சில் இருந்து துாக்கி வீசப்பட்டார். அவரது நண்பரும் தாக்கப்பட்டார்.
- டிச., 17: நிர்பயா, சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்ப்பு.
- டிச., 17 - டிச., 21: இக்குற்றத்தில் ஈடுபட்ட பஸ் டிரைவர், ராம் சிங், அவன் சகோதரர் முகேஷ் சிங் ஆகிய இரண்டு பேரும் ராஜஸ்தானில் கைது. வினய் சர்மா, புவன் குப்தா, ஒரு சிறுவன் ஆகியோர் டில்லியில் கைது. அக் ஷய் தாகூர், அவுரங்காபாத்தில் கைது.
- டிச., 21: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி, சப்தர்ஜங் மருத்துவமனையில்மாஜிஸ்தி ரேட்டிடம் வாக்குமூலம்.
- டிச., 26: குற்றவாளிகளை துாக்கிலிட வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம்.
- டிச., 27:நிர்பயா, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- டிச., 29: சிகிச்சை பலனின்றி, அதிகாலை, 2:15 மணிக்கு உயிரிழந்தார். பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம், பார்லிமென்டில் தாக்கல்.
- 2013 ஜன., 3: கற்பழிப்பு, கொலை, கடத்தல், ஆவணங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் ஐந்து குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு. ஆறு பேரில் மைனர் குற்றவாளி வழக்கு மட்டும், சிறுவர் கோர்ட்டுக்கு மாற்றம்.
- ஜன., 17: டில்லி சாகேட் விரைவு கோர்ட்டில் விசாரணை துவங்கியது.
- மார்ச் 11: திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளியான ராம் சிங், துாக்கிட்டு தற்கொலை. மற்ற ஐந்து பேர் மீதான விசாரணை தொடர்ந்தது.
- ஆக., 31: குற்றம் நிரூபிக்கப்பட்ட மைனர் குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை.
- செப்., 3: விரைவு கோர்ட்டில் விசாரணை முடிந்தது; தீர்ப்பு செப்., 10ல் வெளியாகும் என அறிவிப்பு.
- செப்., 10: இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பு. 13 பிரிவுகளில் இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டுஉள்ளது.
- செப்., 11: இரு தரப்பு விசாரணை நிறைவு. தீர்ப்பு செப்., 13க்கு ஒத்திவைப்பு.
- செப்., 13: குற்றவாளிகளான அக் ஷய் தாகூர், பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட் தீர்ப்பு.
- 2014 ஜன., 3: சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.
- 2014 ஜூன் 2: குற்றவாளிகள் இருவர் இத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு.
- 2014 ஜூலை 14: குற்றவாளிகளின் துாக்கு தண்டனைக்கு இடைக்கால தடை.
- 2015 டிச.: மைனர் குற்றவாளியை விடுவிக்கக் கூடாது என பா.ஜ.,வின் சுப்பிரமணியன் சாமி டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு.
- 2015 டிச., 18: இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இதை தள்ளுபடி செய்தது.
- டிச., 20: மைனர் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனை முடிந்ததால், விடுதலை.
- 2016 ஏப்., 3: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்.
- 2017 மே 5: நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்த டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 05.05.2017
No comments:
Post a Comment