இளம்பெண் பலி : கமிஷனருக்கு 'நோட்டீஸ்'
சென்னை: மின் கம்பம் விழுந்து இளம்பெண் பலியானது குறித்து, திருப்பூர் போலீஸ் கமிஷனர், ஆறு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, மாநில மனித உரிமைகள் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் புனிதா, 22; திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சாப்பாடு வாங்க, மங்கலம் சாலையில் உள்ள உணவகத்துக்கு சகோதரருடன் சென்றார். அப்போது, அங்கிருந்த உயர் கோபுர மின் கம்பம் முறிந்து விழுந்ததில், புனிதா உயிரிழந்தார். இதுகுறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து, ஆணைய தலைவர் டி.மீனாகுமாரி பிறப்பித்த உத்தரவில், 'புனிதாவின் மரண வழக்கு குறித்து, திருப்பூர் போலீஸ் கமிஷனர், ஆறு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்ட மின் வாரிய கண்காணிப்பு பொறியாளர், மின் கம்பம் முறிந்து விழுந்தது குறித்து, விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் – 19.05.2017
No comments:
Post a Comment