டாஸ்மாக் கடையை எதிர்த்துப் போராடினால் போலீஸ் நடவடிக்கை கூடாது'
உயர் நீதிமன்றம் அதிரடி
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் அதிக அளவிலான விபத்துகள் நடக்கின்றன என்று கூறி அங்கிருக்கும் டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைகளில் இருந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதனால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, மாற்று இடங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நெடுஞ்சாலைகளுக்கு அருகே கடைகள் இருக்கக் கூடாது என்பதால், மாற்று இடங்களில் அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலானவை ஊருக்குள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்களைக் கலைக்க, போலீஸார் தடியடி நடத்திவருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, "டாஸ்மாக் கடைக்கு எதிராக, அமைதியாகப் போராடும் பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபடக்கூடாது. குறிப்பாக, டாஸ்மாக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், டாஸ்மாக் கடையைத் திறக்கக்கூடாது" என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இரா. குருபிரசாத்
நன்றி : விகடன் செய்திகள் – 08.05.2017
No comments:
Post a Comment