ஜாமீனுக்கு சொத்து ஆவணம் தேவையா? ஐகோர்ட் அதிரடி
'ஜாமினில் வருவதற்கு, சொத்து ஆவணங்கள் தாக்கல் செய்யும்படி வற்புறுத்தக்
கூடாது; உத்தரவாதம் தருபவர் அரசு ஊழியராகவோ, ரத்த உறவாகவோ இருக்கவும் தேவையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
நிபந்தனை :
சென்னையை சேர்ந்த சகாயம் என்பவருக்கு, முன் ஜாமின் வழங்கும் போது, சில நிபந்தனைகளை, உயர் நீதிமன்றம் விதித்தது. '15 ஆயிரம் ரூபாய்க்கு உத்தரவாதம், ரத்த உறவாக இருவரது உத்தரவாதம் வழங்க வேண்டும்' என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்த நிபந்தனைகளில்
மாற்றம் செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில்
சகாயம் மனு தாக்கல் செய்தார். அவர் தரப்பில், '15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணம் தாக்கல் செய்ய, செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமின்தாரர்களுக்கு சொத்து கிடையாது' என, தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு:
ஜாமினுக்கான உத்தரவாதத்தை
குற்றம் சாட்டப்பட்டவர்
வழங்கும் போது அல்லது ஜாமின்தாரர் உத்தரவாதம் வழங்கும் போது, சொத்து ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, வற்புறுத்த முடியாது.
ஜாமின் அளிப்பவர் அரசு ஊழியராகவோ, ரத்த உறவாகவோ, உள்ளூர்காரராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சொத்து ஆவணங்கள், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாசில்தாரின் சான்றிதழ், வாகன பதிவு சான்றிதழை, குற்றம் சாட்டப்பட்டவரோ, ஜாமின்தாரரோ சமர்ப்பிக்க வேண்டும் என, கட்டாயப்படுத்தக் கூடாது.
ஆவண நகல் :
ஜாமின்தாரர், நேர்மையான நியாயமான நபராக இருக்க வேண்டும்.
ரொக்க உத்தரவாதத்தை
வழங்கும்படி, முதல்கட்டத்திலேயே
வற்புறுத்தக் கூடாது. தனிப்பட்ட உத்தரவாதம் அளிக்க முடியாமல், ரொக்க உத்தரவாதம் அளிக்க முன்வந்தால், அதை ஏற்கலாம்.
பாஸ்போர்ட், குடும்ப அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தின் நகலை, அடையாளத்தை றுதிப்படுத்துவதற்காக,நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
(இது பற்றிய செய்தியானது மதுரை பதிப்பு தினமலர் நாளிதழில் பக்கம் 14ல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் நகலினை கீழே காணலாம்)
நன்றி : தினமலர் நாளிதழ் - 05.05.2017
No comments:
Post a Comment