Cr.P.C:155(4) கைது பற்றி என்ன சொல்கிறது?
நம்முடைய நாட்டில் மற்றவற்றிற்கு குறை இருக்கலாம். ஆனால், குற்றங்களுக்கு குறைவே இல்லை. ஏதோ ஒரு குற்றம் செய்திருக்கிறார் என்று ஒருவரை விசாரணை செய்ய காவல்துறை அணுகினால், அவர் பல குற்றங்கள் செய்துள்ளது விசாரணை மூலம் தெரிய வருவதை, நாம் அடிக்கடி ஊடகங்களின் வாயிலாக கண்டு வருகிறோம்.
அது போன்ற ஒரு நபர் மீது முதல் தகவல் அறிக்கை போடப்படுகிறது. அவர் செய்த குற்றங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றது. அந்த நபர் கைது செய்யப்பட வேண்டியதல்லாத குற்றத்தையும், கைது செய்யப்பட வேண்டிய குற்றத்தையும், புரிந்திருக்கிறார். அவரை கைது செய்யலாமா? வேண்டாமா? என்ற கேள்வி எழுகின்ற போது, குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் - 1973, பிரிவு - 155(4) நமக்கு வழி காட்டுகிறது.
அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்றால், ஒரு வழக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குற்றங்களைப் பற்றியதாக இருந்து, அவற்றில் குறைந்தது ஒன்றாவது கைது செய்யப்படக் கூடிய இருந்தால், அந்த வழக்குக்கு உட்பட்டவரை காவல்துறையினர் கைது செய்யலாம்.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment