6 முக்கிய சாலை விதிகள்...மீறினால் 6 மாதம் உரிமம் ரத்து...அரசு அதிரடி!
சென்னை : சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலான 6 முக்கிய சாலை விதிகளை மீறினால் நிச்சயம் 6 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழக போக்குவரத்துத் துறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் 6 முக்கிய சாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டள்ளது.
⧭ இதன்படி அதிவேகமாக வாகனம் ஒட்டுவது, சிவப்பு விளக்கு மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது/சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
⧭ இதே போன்று செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஒட்டுவது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டுவது உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கும் 6 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற நடவடிக்கையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
⧭ உச்சநீதிமன்றம் சாலை பாதுகாப்பு குழு அறிவுறுத்தல் அடிப்படையில் போக்குவரத்து துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் வகிக்கும் நிலையில் இதனை குறைக்கும் வகையில் போக்குவரத்து ஆணையர் மூலமாக RTO அலுவலர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
⧭ ஏற்கனவே ஜூன் 6 ம் தேதி தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர், டி.ஜி.பி போக்குவரத்து செயலர் கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக தான் ஜூன் 20 அறிவிப்பில் வாகன ஒட்டிகள் கட்டாயம் ஒரிஜினல் லைசன்ஸ் இருக்க வேண்டும் என அறிவிப்பு செய்திருந்தார்கள்.
⧭ இதற்கு முன்பு குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேக விபத்துக்கு மட்டுமே லைசன்ஸ் ரத்து என்ற விதி இருந்தது. இதே போன்று ஹெல்மெட் அணியாதவர்களுக்கு முதல் முறை ஒரு கட்டணம், அடுத்தடுத்த முறை அதிக கட்டணம் என அபராதம் வசூலிக்கப்படுகிறது.
By: Gajalakshmi
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் – 22.06.2017
No comments:
Post a Comment