கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் - கலெக்டர்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய வட்டங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவர்கள் நேற்று திடீரென ஆய்வுசெய்தார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அவர் போட்ட உத்தரவு:
- கிராம நிர்வாக அலுவலகங்களை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை திறந்து வைத்திருக்க வேண்டும்.
- பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோரிக்கை மனுக்களின் விவரங்களை முறையாக பதிவேட்டில் பதிந்து, தொடர்ந்து பராமரித்து வரவேண்டும்.
- சாதிச் சான்று, வருமானச் சான்று, பிறப்பு இறப்புச் சான்று உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளுக்காக வரும் விண்ணப்பங்களைப் பதிந்து, உடனடியாக விசாரிக்க வேண்டும்.
- விண்ணப்பங்களின் தற்போதைய நிலைகுறித்து அவ்வப்போது பதிவுசெய்ய வேண்டும்.
- பதிவேடுகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி அனைத்து நிலையிலுள்ள அலுவலர்களும் ஆய்வுக்கு வரும்போது அவர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
- பொதுமக்களை அலையவிடாமல், குறித்த காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு உதவுவதே கிராம நிர்வாக அலுவலர்களின் தலையாய கடமை.
- கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி மூலம் பெறப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை, உடனுக்குடன் விசாரித்து உரிய பதிலைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- பள்ளி செல்லும் குழந்தைகள், உதவித்தொகை கேட்பவர்கள் ஆகியோருக்கு அர்ப்பணிப்போடு உதவ வேண்டும்.
- தேவையற்ற காலதாமதங்களைத் தவிர்த்து, முழு நேரமும் கிராமங்களிலிருந்து பணியாற்ற வேண்டும்'
நன்றி : விகடன் செய்திகள் - 09.06.2017
No comments:
Post a Comment