சசியிடமிருந்து
மாதந்தோறும் ரூ.10 லட்சம் மாமூல்
பெங்களூரு:
கர்நாடக மாநிலம், பெங்களூரில் பரப்பன
அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ள அ.தி.மு.க., பொதுச்
செயலர் சசிகலாவிடம் லஞ்சம் பெற்று சலுகைகள் வழங்கப்பட்டதாக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, அத்துறையின் டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் மீதே புகார் தெரிவித்துள்ளார்.
இது
தொடர்பாக ம.ஜ.த., கட்சியைச் சேர்ந்த, கர்நாடகா,
'மாஜி' முதல்வர் குமாரசாமி கூறியதாவது: சிறை அதிகாரிகள், டி.ஜி.பி.,க்கு
மாதந்தோறும் ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதில், 25 லட்சம்
ரூபாய், டி.ஐ.ஜி.,க்கு
செல்ல வேண்டும். இந்த பணத்தை வழங்காமல், டி.ஜி.பி.,யே
பெற்றுக் கொண்டதால் தான், முறைகேடு வெளியே
வந்துள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.
விதிமுறைகளை மீறி, மீடியாக்கள்
முன் பேட்டியளித்த, சத்யநாராயண ராவ் மற்றும்
ரூபா ஆகியோரை, விடுப்பில் அனுப்பி விட்டு, விசாரணை
நடத்த வேண்டும். எனக்கு கிடைத்துள்ள தகவலின் படி,
சசிகலாவிடமிருந்து
இரண்டு கோடி ரூபாய் பெற்றுக் கொண்டது மட்டுமின்றி,
மாதந்
தோறும் 10 லட்சம் ரூபாய், 'மாமூல்' தரவேண்டு
மென்றும் கூறியதாக தெரிய வந்துள்ளது.
நிர்வாகம் சரியில்லாததால் தான், அதிகாரிகள்
ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி கொள்கின்றனர். மற்ற விசாரணை போன்று, இவ்விசாரணையிலும், 'பி' ரிப்போர்ட்
வழங்கக் கூடாது. காங்கிரஸ் ஆட்சி முடியும் தருவாயில், ஒரு
வழக்கிலாவது, உண்மையை வெளிப்படுத்த
வேண்டும்.இவ்வாறு குமாரசாமி கூறினார்.
கர்நாடக அரசுக்கு 'சிம்ம சொப்பனம்' ரூபா
* கர்நாடக
மாநிலம் தாவணகரேயைச் சேர்ந்தவர் ரூபா,
42; எஸ்.எஸ்.எல்.சி.,யில், மாநில
அளவில், 20வது ரேங்க் பெற்றார். பி.ஏ., பட்டப்
படிப்பில், தங்கப்பதக்கம் பெற்று
மாநிலத்தில் முதலிடமும்; எம்.ஏ., முதுகலை
பட்டப் படிப்பில், மூன்றாவது இடமும் பெற்றார்.
* கடந்த, 2000ல் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தேசிய
அளவில், 43வது இடத்தை பிடித்து, ஐ.பி.எஸ்., அதிகாரியானார்.
* ரூபாவின், 17 ஆண்டுகள் அரசு பணியில், உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு
ஒத்துழைப்பு அளிக்காததால், 30க்கும் மேற்பட்ட முறை
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* ஆரம்ப காலத்தில், வாடகை
வீட்டில் தங்குவதற்கு கூட பணமில்லாமல் சிரமப்பட்டுள்ளார் யாத்கிரியில் பணியில்
இருக்கும் போது, அரசு பள்ளியில் தன் மகளை
சேர்த்து படிக்க வைத்தார் கலாசாரத்தை மதித்து, பண்டிகை யின் மகத்துவத்தை
குழந்தைகளுக்கு விளக்கி கொண்டாடுவார்.
* பணியில் யார்
குறுக்கிட்டாலும் அதை பொருட்படுத்தாமல் நினைத்ததை செயல்படுத்தியவர்.
* இரண்டு முறை, 'மிஸ்
தாவணகரே' அழகி பட்டம் பெற்றதால், பல
மொழி சினிமாக்களில் நடிக்க அழைப்பு வந்தும் அதை ஏற்க மறுத்து, மக்கள்
நல பணியாற்றினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 14.07.2017
No comments:
Post a Comment