disalbe Right click

Wednesday, July 26, 2017

நவம்பர் 19-இல் 'நெட்' தேர்வு, ஜூன் மாதத் தேர்வு ரத்து!

நவம்பர் 19-இல் 'நெட்' தேர்வு, ஜூன் மாதத் தேர்வு ரத்து!
நடப்பு ஆண்டான 2017ல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான நெட்எனப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வுநவம்பர் மாதம் 19ம் தேதியில் நடத்தப்பட உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும், ஆண்டுக்கு இருமுறை இந்தத் தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு என்று சொல்லப்படக்கூடிய University Grants Commission (UGC) நடத்தி வந்தது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்று சொல்லப்படக்கூடிய The Central Board of Secondary Education (CBSE) நடத்தி வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டுத்தேர்வை இந்த ஆண்டின் துவக்கத்தில் (ஜனவரி) நடத்திய CBSE அதற்கு முன்னதாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.
அதில் ஏராளமாக தேர்வுகளை நடத்தி வருவதன் மூலம் தங்களுக்கு பணிச்சுமை அதிகரித்திருப்பதால் நெட் தேர்வை தங்களால் இனி நடத்த இயலாது என்பதை CBSE தெரிவித்திருந்தது.
இது சமபந்தமாக நடந்த கலந்தாலோசனைக்குப் பிறகு CBSE தொடர்ந்து நெட் தேர்வை நடத்தும் என்று UGC அறிவித்தது.
நவம்பர் 19ல் நெட் தேர்வு
2017ம் ஆண்டிற்கான நெட் தேர்வு நவம்பர் மாதம் 19ம் தேதி நடத்தப்படும். இதற்காக ஆன்லைன் மூலமாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்விற்கான கட்டணத்தை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை செலுத்தலாம். இது தொடர்பான முழுமையான அறிவிப்பு, 2017 ஜூலை 24ம் தேதி CBSE இணையதளத்தில் http://cbsenet.nic.in  வெளியிடப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத் தேர்வு ரத்து
கடந்த (2017) ஜூன் மாதத்தில் நடந்திருக்க வேண்டிய தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. டிசம்பரில் நடக்க வேண்டியத் தேர்வு நவம்பரில் நடத்தப்பட உள்ளது. இனி ஆண்டுக்கு ஒருமுறைதான் நெட் தேர்வை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக CBSE அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(15.07.2017 - தினமணி நாளிதழில் வெளிவந்த செய்தியினைத் தழுவி எழுதப்பட்டுள்ளது)
அன்புடன் செல்வம் பழனிச்சாமி



No comments:

Post a Comment