disalbe Right click

Monday, July 31, 2017

85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை செல்லாது

85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை செல்லாது
சென்னை: மருத்துவ படிப்பில், மாநில பாட திட்ட மாணவர்களுக்காக, 85 சதவீத இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று(ஜூலை, 31) உத்தரவிட்டுள்ளது.
தனி நீதிபதி உத்தரவு
நீட் தேர்வை தொடர்ந்து, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாட திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீத இட ஒதுக்கீடு செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தஞ்சாவூர், ஞானம் நகரைச் சேர்ந்த, தார்னிஷ்குமார் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
விசாரணை முடிந்த நிலையில் மருத்துவப் படிப்பில், 85 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிய தர வரிசை பட்டியல் தயார் செய்து கவுன்சிலிங் நடத்த வேண்டும்.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக மாணவர் சேர்க்கை நடத்த கூடாது உள் ஒதுக்கீடு இன்றி ஏற்கனவே உள்ள ஒதுக்கீடு அடிப்படையில் கவுன்சிலிங் நடத்த வேண்டும். எனவும் உத்தரவிட்டார்.
அரசு மேல் முறையீடு
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தும் உத்தரவு பிறப்பித்தது. காலம் தாழ்த்தாமல் மாணவர் சேர்க்கையை உடனே நடத்தும்படியும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
நன்றி : தினமலர் - கல்வி மலர் - 31.07.2017

No comments:

Post a Comment