ஆதரவற்ற குழந்தைகள் - அரசு தரும் சலுகைகள்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தமிழக
அரசின் சமூக நலத்துறை மூலமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் “சத்யா அம்மையார் நினைவு ஆதரவற்றோர் அரசு குழந்தைகள் காப்பகம்” ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
சேருவதற்கான தகுதி என்ன?
இவற்றில் சேருவதற்கு தாய், தந்தை இல்லாத குழந்தைகள், பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மட்டும் இல்லாத குழந்தைகள், தொழுநோய் மற்றும் எய்ட்ஸ் நோய் ஆகியவற்றால்
பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குழந்தைகள் ஆகியவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள். நமது தமிழ்நாட்டில் மொத்தம் 27 இடங்களில் இந்த அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றது.
இதில் சுமார் 6000 மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இதில் குழந்தைகளை சேர்க்க
விரும்புபவர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறை அதிகார்யையோ அல்லது அந்த
அரசு குழந்தைகள் காப்பகத்தின் கண்காணிப்பாளர்
அவர்களையோ நேரடியாக சந்தித்து, விண்ணப்பம்
பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை
ஆதரவற்ற குழந்தைச் சான்று, வருமானச் சான்று ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். இவற்றில் கிராம நிர்வாக
அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும்
வட்டாட்சியர் கையொப்பம் பெற்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க
வேண்டும்.
கிடைக்கின்ற பயன்கள்
தேர்ந்து எடுக்கப்படுகின்ற 5 வயது முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகள் அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்படுவார்கள். அவர்கள் எந்த வகுப்பில் இருந்தும் சேர்ந்து கொள்ளலாம். உணவு
மற்றும் தங்குமிடம் இலவசம். மேலும், இரண்டு செட் சீருடைகள் அவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும். ஆறாவது வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு படிக்க
வைக்கப் படுகிறார்கள்.
அவர்கள் பெறுகின்ற மதிப்பெண்கள்
அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டிலும் இரண்டு மாணவிகள் பொறியியல் படிப்பு, இரண்டு மாணவிகள் மருத்துவம் படிக்க அரசு அனுமதித்துள்ளது. இதுதவிர
கலை, இலக்கிய கல்லூரிகளிலும், பாலிடெக்னிக்களிலும் படிக்க அனுமதி வழங்கப்படுகிறது. மாணவிகளைக்
காண வார இறுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment