disalbe Right click

Monday, July 17, 2017

சிறைக்குள் ஏமாந்த சின்னம்மா!

இந்த "டப்பா" ரூமுக்குப் போயா ரூ. 2 கோடி செலவழிச்சாங்க சசிகலா.. ஏமாந்துட்டீங்களேம்மா!
பெங்களூர்: பரப்பன அக்ரஹார சிறையில் தங்கியிருக்கும் சசிகலாவுக்கு கூடுதல் வசதிகளுக்காக ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தொகைக்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைகள் மதிப்பில்லாதது போல் தெரிகிறது.
சிறப்பு வசதிகள்
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பரன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு அடைக்கப்பட்ட நாள் முதலே விதிமுறைகளை தனக்கேற்றார்போல் வளைத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
பணத்தை தண்ணீராக...
சிறப்பு வசதிகள் பெங்களூர் சிறையில் சிறை துறை டிஐஜி ரூபா மேற்கொண்ட ஆய்வில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டது தெரியவந்தது. அவருக்கென்று தனி சமையலறை இருப்பதும், அதில் தனக்கு தேவையானதை தானே சமைத்து சாப்பிடுவதும் தெரியவந்தது.
பணத்தை தண்ணீராக... சசிகலா சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சமாக கொடுத்தது மட்டும் அல்லாமல் அவ்வப்போது அவர் விதிமுறைகளை மீற நினைக்கும் போதெல்லாம் பணத்தை தண்ணீராக வாரி இறைத்திருக்கிறார். மேலும் ஓரிரு முறை சிறையை விட்டு சசிகலா வெளியே சென்றும் வந்துள்ளதாக தெரிகிறது.
சசிகலாவுக்கு 5 அறைகள் இந்நிலையில் சசிகலாவுக்கு சிறையில் 5 அறைகள் இருப்பது டிஐஜி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் பார்வையாளரை சந்திக்க ஒரு அறையும், டிவி பார்க்க, யோகாசனம் செய்ய என ஒவ்வொரு அறையும் இருந்துள்ளது. மேலும் சிறையிலேயே சசிகலா குக்கர் வைத்து சமைக்கவும் சதி செய்யப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.
Sasikala prison rooms are closed with a cloth
ஒர்த் இல்லையே நாளிதழ், ஊடகங்களில் சிறப்பு வசதிகள், சிறப்பு வசதிகள் என்று குறிப்பிட்டுள்ளதை பார்த்த போது ஏதோ 5 ஸ்டார் ஹோட்டல் அறை அளவுக்கோ அல்லது 3 ஸ்டார் ஹோட்டல் அறை அளவுக்கோ இருக்கும் என்று பார்த்தால் போயஸ் கார்டனில் உள்ள காவலர்கள் தங்கியுள்ள அறையே தேவலை போல. அவ்வளவு மோசமாக இருக்கிறதே. சிறையில் இருக்கும் சசிகலாவை அவ்வழியாக போவோர் வருவோர் பார்த்து விடக் கூடாது என்பதற்காக துணியால் ஸ்கிரீன் போல் போடப்பட்டுள்ளது. கைதியை கைதியாக பாவிக்க வேண்டும்தான். ஆனால் லஞ்சம் கொடுத்தாலும் அதற்கு ஒர்த் இருக்க வேண்டுமே. ஏமாந்துட்டீங்களே சின்னம்மா... ஏமாந்துட்டீங்களே!!
Posted By: Lakshmi Priya
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் - 17.07.2017


No comments:

Post a Comment