சிறையில், சசிக்கு சலுகைகள் வழங்கியது உண்மைதான்
புதிய
சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புதல்
பெங்களூரு: சொத்துக்குவிப்பு
வழக்கில் சிறயைில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் உண்மைதான்
என சிறைத்துறை உயர் அதிகாரிகள் இன்று ஒத்துக்கொண்டனர்.
சசிக்கு சிறையில் சலுகைகள்
வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி., ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இதற்கென ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து
சிறைதுறை டி.ஜி.பி., சத்தியநாராயணன், ரூபா ஆகியோர் இட மாற்றம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் கர்நாடக சட்டசபை
வளாகத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடந்தது. குழு தலைவர் ஆர். அசோக்
தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., என்.எஸ் மேக்ரட், டி.ஐ.ஜி., ரேவண்ணா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
சசிக்கு வழங்கப்பட்ட சலுகைகள்
குறித்து கேள்வி கேட்கப்பட்டன. சசிக்கு வழங்கப்பட்ட டி.வி., சிறப்பு சமையலறை இருந்தது உண்மைதான், சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்தது உண்மை தான். 7, மற்றும் 8 வளாகத்தில் கண்காணிப்பு காமிரா
செயல்படவில்லை. இவ்வாறு குழு முன்பு ஒத்து கொண்டனர்.
இதனை குழு தலைவர் ஆர். அசோக் மீடியாக்களிடம்
தெரிவித்தார். ஆக ரூபா கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை தான் என நிரூபணம்
ஆகியுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 21.07.2017
No comments:
Post a Comment