'வரதட்சணை கொடுமை வழக்கில் விசாரிக்காமல் கைது செய்யாதீங்க!'
புதுடில்லி:''வரதட்சணை தடுப்பு சட்டம், தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது; வரதட்சணை வழக்கில், விசாரணை நடத்தாமல், உடனடியாக யாரையும் கைது செய்யக்
கூடாது,'' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
வரதட்சணை தடுப்பு சட்டத்தை, சிலர் தவறாக பயன்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மீதான
விசாரணை, நீதிபதிகள்,ஆதர்ஷ் குமார் கோயல், லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு .முன் நடந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
➽வரதட்சணை தடுப்பு சட்டம், தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது.
➽வரதட்சணை புகார் கொடுக்கப்பட்டால், உடனடியாக யாரையும் கைது செய்யக் கூடாது
➽வரதட்சணை புகார் கொடுக்கப்பட்டால், உடனடியாக யாரையும் கைது செய்யக் கூடாது
➽குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்த
பின்தான், கைது நடவடிக்கையை, போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
➽இதற்காக, மாவட்டந்தோறும், ஒன்று அல்லது
இரண்டு குடும்பநல கமிட்டிகளை, “மாவட்ட சட்ட சேவை
ஆணையம்” அமைக்க வேண்டும்.
➽வரதட்சணை தொடர்பாக புகார்களை
பெறும் போலீசார், துணை கலெக்டர்கள் அதை, மாவட்ட குடும்ப நல கமிட்டியிடம், அனுப்ப வேண்டும்.
➽இந்த புகார்களை, மாவட்ட குடும்பநல கமிட்டி விசாரித்து, ஒரு மாதத்தில், புகாரை அனுப்பிய
அதிகாரியிடம், அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
➽அதன் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
➽குடும்பநல கமிட்டியில், மூன்று உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
➽இதை, ஆண்டுக்கு ஒரு முறை, மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து, மாற்றி அமைக்க வேண்டும்.
➽இந்த கமிட்டியில், சட்ட ஆலோசகர்கள், சமூக சேவகர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், அதிகாரிகளின் மனைவியரை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.
➽ஆனால், வழக்கில் சாட்சிகளாக,கமிட்டி உறுப்பினர்களை சேர்க்க கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு
உள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.07.2017
No comments:
Post a Comment