disalbe Right click

Monday, July 3, 2017

சட்டம் எங்கே படிக்கலாம் ?








சட்டம் எங்கே படிக்கலாம் ?
+2, பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் (The Tamilnadu Dr. Ambedkar Law University) இடம்பெற்றிருக்கும் பல்வேறு சட்டப்படிப்புகளில் 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.இளநிலைச் சட்டப்படிப்புகள்: இப்பல்கலைக்கழகத்தில் இருக்கும் சட்டப்பள்ளியில் (School of Excellence in Law) ஐந்தாண்டு கால அளவிலான B.A.,L.L.B (Hons.), B.B.A.,L.L.B (Hons.), B.Com.,L.L.B., B.C.A.,L.L.B ஆகிய நான்கு பிரிவுகளிலான ஒருங்கிணைந்த பட்டப்படிப்புடன் கூடிய இளநிலைச் சட்டப்படிப்புகளும், மூன்று ஆண்டு கால அளவிலான L.L.B (Hons.) எனும் இளநிலைச் சட்டப்படிப்பும் இடம்பெற்றிருக்கின்றன.
ஐந்தாண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்புக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 60% மதிப்பெண்களுடனும், பிற பிரிவினர் 70% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மூன்றாண்டு கால இளநிலைச் சட்டப்படிப்பிற்கு ஏதாவதொரு பட்டப்படிப்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 55% மதிப்பெண்களுடனும், பிற பிரிவினர் 60% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதுமில்லை. 
முதுநிலைச் சட்டப்படிப்புகள்: இப்பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு கால அளவிலான 1) Business Law, 2) Constitutional Law & Human Rights, 3) Intellectual Property Law, 4) International Law and Organisation, 5) Environmental Law and Legal Order, 6) Criminal Law and Criminal Justice Administration, 7) Human Rights and Duties Education, 8) Labour and Administrative Law, 9) Taxation Law எனும் ஒன்பது பிரிவுகளில் முதுநிலைச் சட்டப்படிப்புகள் (L.L.M) இடம்பெற்றிருக்கின்றன. 
முதுநிலைச் சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஐந்து அல்லது மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்பில் புதிய ஒழுங்குவிதிகள் எனில் 45% மதிப்பெண்களுடனும், பழைய ஒழுங்குவிதிகள் எனில் 40% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.  
தொலைநிலைக் கல்விப் படிப்புகள்:
இப்பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்விப் படிப்புகளாக, இரண்டாண்டு கால அளவிலான நிறுமச் சட்டங்கள் (Master of Corporate Laws  M.C.L) எனும் பிரிவிலான முதுநிலைச் சட்டப்படிப்பும், ஒரு ஆண்டு கால அளவிலான
1) Business Law - P.G.D.B.L,
 2) Environmental Law  P.G.D.E.L,
 3) Information Technology LawP.G.D.I.T.L,
 4) Intellectual Property Law  P.G.D.I.P.L,
 5) Labour Law  P.G.D.L.L,
 6) Human Rights & Duties Education  P.G.D.H.R & D.E,
 7) Cyber Forensic and Internet Security P.G.D.C.F & I.S,
 8) Criminal Law, Criminology & Forensic Science P.G.D.C.L.C & F.S,
 9) Law Librarianship  P.G.D.L.Lib, (Medico  Legal Aspects  P.G.D.M.L.A),
 10) Consumer Law & Protection  P.G.D.C.l & P,
11) Maritime Law P.G.D.M.L
எனும் 11 பிரிவுகளிலான முதுநிலைச் சட்டப் பட்டயப்படிப்புகளும், ஆறுமாத கால அளவிலான ஆவணமாக்குதல் பயிற்சி (Course in Documentation) எனும் சான்றிதழ் படிப்பும் இடம்பெற்றிருக்கின்றன.
முதுநிலை நிறுமச் சட்டங்கள் படிப்பு மற்றும் முதுநிலைச் சட்டப் பட்டயப்படிப்புகள் அனைத்திற்கும் ஏதாவதொரு இள நிலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. சான்றிதழ் படிப்புக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
 மேற்காணும் அனைத்துப் படிப்புகளுக்குமான விண்ணப்பத்தை
”The Registrar,
 The Tamilnadu Dr. Ambedkar Law University,
 “Poompozhil”
 No.5, Dr. D.G.S Dinakaran Salai,
 Chennai - 600028”
எனும் முகவரியில் நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ பெற்றுக்கொள்ள முடியும். இளநிலை மற்றும் முதுநிலைச் சட்டப்படிப்புகள் அனைத்திற்கும் நேரடியாகப் பெற விரும்புவோர் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.500, பிற பிரிவினர் ரூ.1000 எனவும், முதுநிலைச் சட்டப் பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.250, பிற பிரிவினர் ரூ.500 என்றும், விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். 

அஞ்சல் வழியில் பெற விரும்புவோர் இளநிலை மற்றும் முதுநிலைச் சட்டப்படிப்புகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.600, பிற பிரிவினர் ரூ.1100 என்றும், முதுநிலைச் சட்டப் பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.350, பிற பிரிவினர் ரூ.600 என்றும்  விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
அஞ்சல் வழியில் பெற விரும்புவோர்
“The Registrar,
The Tamilnadu Dr. Ambedkar Law University,
 “Poompozhil”
 No.5, Dr. D.G.S Dinakaran Salai,
 Chennai - 600028”
எனும் முகவரிக்கு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, வேண்டுதல் கடிதம் ஒன்றையும் சேர்த்து அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு படிப்பிற்கும் தனி விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணமும் தனியாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தினை ஏதாவதொரு இந்தியன் வங்கிக் கிளையில் உரிய சலான் வழியாக மட்டுமே செலுத்தவேண்டும். விண்ணப்பக் கட்டணத்திற்கான சலானை பல்கலைக்கழக அலுவலகத்தில் பெற்றுக்கொண்டோ அல்லது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்தோ பயன்படுத்திக்கொள்ளலாம். 
நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் நகல்களை இணைத்துப் பல்கலைக்கழக அலுவலகத்தில் நேரடியாகக் கொடுக்கலாம்.
அஞ்சல் வழியில் அனுப்ப விரும்புவோர்
“The Chairman,
 Law Admissions 2017-2018,
 The Tamilnadu Dr. Ambedkar Law University,
 “Poompozhil”
 No.5, Dr. D.G.S Dinakaran Salai,
 Chennai - 600028”
எனும் முகவரிக்குத் தொடர்புடைய படிப்பிற்கான கடைசி நாளுக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். 

ஐந்தாண்டு இளநிலைச் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 19.6.2017. மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.6.2017. முதுநிலைச் சட்டப்படிப்பு மற்றும் தொலைநிலைக் கல்விப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 28.7.2017.

மேலும் கூடுதல் தகவல்களை அறிய மேற்காணும் பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது பல்கலைக்கழக அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றோ, பல்கலைக்கழகத்தின் 044 - 24641212 எனும் அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ தகவல்களைப் பெறலாம். 

அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டப் படிப்புகள்தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் (The Tamilnadu Dr. Ambedkar Law University) இணைவிப்பு பெற்றுத் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் அரசு சட்டக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் இளநிலைச் சட்டப்படிப்புகளில் 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய இடங்களில் அரசுச் சட்டக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இளநிலைச் சட்டப்படிப்புகள்: மேற்காணும் சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த பட்டப்படிப்புடன் கூடிய இளநிலைச் சட்டப்படிப்பு (B.A.,L.L.B) மற்றும் மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்பு (L.L.B) எனும் இரண்டு வகையான இளநிலைச் சட்டப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. 
கல்வித்தகுதி:
ஐந்தாண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்புக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40% மதிப்பெண்களுடனும், பிற பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்றாண்டு காலச் சட்டப்படிப்பிற்கு ஏதாவதொரு பட்டப்படிப்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40% மதிப்பெண்களுடனும், பிற பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு சட்டப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதுமில்லை. 
விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை நேரடியாகப் பெற விரும்புவோர் மேற்காணும் அரசுச் சட்டக் கல்லூரிகளிலும், விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். நேரடியாகப் பெற விரும்புவோர் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.250, பிற பிரிவினர் ரூ.500 என்று விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டும். 
அஞ்சல் வழியில் பெற விரும்புவோர் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.350, பிற பிரிவினர் ரூ.600 என விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். அஞ்சல் வழியில் பெற விரும்புவோர்
The Registrar,
 The Tamilnadu Dr. Ambedkar Law University,
 “Poompozhil”
No.5, Dr. D.G.S Dinakaran Salai,
 Chennai - 600028”
எனும் முகவரிக்கு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, வேண்டுதல் கடிதம் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். 
விண்ணப்பக் கட்டணத்தினை ஏதாவதொரு இந்தியன் வங்கிக் கிளையில் உரிய சலான் வழியாக மட்டுமே செலுத்தவேண்டும். விண்ணப்பக் கட்டணத்திற்கான சலானை அரசுச் சட்டக் கல்லூரி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து, நேரடியாகச் சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகங்களிலும், விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நேரடியாகக் கொடுக்கலாம். அஞ்சல் வழியில் அனுப்ப விரும்புவோர்
“The Chairman,
 Law Admissions 2017-2018,
 The Tamilnadu Dr. Ambedkar Law University,
“Poompozhil” No.5, Dr. D.G.S Dinakaran Salai,
 Chennai - 600028”
எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
ஐந்தாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23.6.2017.
மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 17.7.2017.

மேலும் கூடுதல் தகவல்களை அறிய மேற்காணும் பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது அருகிலுள்ள சட்டக்கல்லூரி அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று தகவல்களைப் பெறலாம்.

- தேனி மு. சுப்பிரமணி
நன்றி : தினகரன் நாளிதழ் - 16.06.2017

No comments:

Post a Comment