உங்கள் சொத்தை இனி எந்த ஊரிலும் நீங்களே பதியலாம்!
தமிழகத்தில், பத்திரப்பதிவு முறையில் அதிரடி
மாற்றம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, எந்த ஊர் நிலத்தையும், எந்த ஊரின் சார் - பதிவாளர்
அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியும். இதனால், சொத்து பதிவுக்காக பொது மக்கள் அங்கும், இங்குமாக அலைய வேண்டியதில்லை; கெடுபிடிகளும் இனி இருக்காது. அனைத்து
சார் - பதிவாளர் அலுவலகங்களும், ஆன்லைன் முறைக்கு மாற்றப்படுவதால், இது சாத்தியமாகிறது.
தமிழகத்தில், சொத்து பரிமாற்றம் தொடர்பான
பத்திரங்களை பதிவு செய்ய, 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களின் எல்லைகள்
பிரிக்கப்பட்டு, எந்தெந்த
கிராமங்களில் உள்ளோர், சொத்து
பரிமாற்றங்களை, எங்கு
பதிவு செய்யவேண்டும் என, தெளிவாக
வரையறுக்கப்பட்டுள்ளது.
அதிகாரம்
இதன்படி, ஆண்டுக்கு,
25 லட்சம்
பத்திரங்கள் பதிவாகின்றன. இந்திய பதிவு சட்டம் - 1908ல் வழங்கப்பட்டுள்ள சிறப்பு
அனுமதியின் படி, சென்னை, மும்பை,கோல்கட்டா, டில்லி ஆகிய, நான்கு பெருநகரங்களிலும், தலா ஒரு சார் - பதிவாளர் அலுவலகத்தில், எந்த ஊர் நிலத்தையும், எங்கும் பதிவு செய்ய அதிகாரம்
அளிக்கப் பட்டுள்ளது.
இதன் படி, தமிழகத்தில், வட சென்னை மாவட்ட பதிவாளர்
அலுவலகத்தில் உள்ள, 'இணை சார்
- பதிவாளர்' அலுவலகத்துக்கு
சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில், எந்த ஊரிலும் உள்ள எந்த சொத்தையும், இங்கு பதிவு செய்யலாம்.
ஆனால், சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பு களை
துல்லியமாக சரி பார்ப்பதில் ஏற்பட்ட சிக் கல் மற்றும் அதிகாரிகள் துணையுடன், பத்திரப் பதிவில் நடந்ததாக கூறப்பட்ட
முறைகேடுகளால், அதிகாரப்பூர்வ
அறிவிப்பு இன்றி, இந்த
நடைமுறை நிறுத்தப்பட்டது.
இந்திய பதிவுச்சட்டம் - 1908ல், தமிழக அரசு,
1997 மார்ச்,
29ல் மேற்கொண்ட திருத்தத்தின் படி, சொத்து அமைந்துள்ள பகுதிக்கான சார் -
பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே, பத்திரப் பதிவு செய்ய முடியும் என்பது
கட்டாயமாக்கப் பட்டுள்ளது.இதனால், சொத்து உள்ள பகுதியில் உள்ள சார் -
பதிவாளர் அலுவலகங்களில் மட்டுமே, பத்திரத்தை பதிவு செய்ய முடியும்.
வெளியூர் பத்திரங்களை பதிய முடியாத
நிலை ஏற்பட்டதால், சொத்து
விற்பனையில், சம்பந்தப்பட்டோர், அந்தந்த சார் - பதிவாளர்
அலுவலகத்துக்கு செல்ல வேண்டியது கட்டாயமானது. பத்திர பதிவை எளிமைப்படுத்தும் வகையில்,இந்த நடைமுறையை மாற்ற பதிவுத்துறை
முடிவெடுத்துள்ளது.
இது குறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர்
கூறியதாவது:
பத்திரப்பதிவு பணிகளை,
'டிஜிட்டல்' மயமாக்கும் பணிகள், இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. இதன்படி,
578 சார் -
பதிவாளர் அலுவலகங்களிலும் உள்ள அனைத்து ஆவணங்களும், பதிவேடுகளும்,
'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்படுகின்றன.
சரி பார்க்கலாம்
தற்போது, எந்த அலுவலகத்தின் பதிவேடுகளையும், எந்த பகுதியில் இருந்தும் சரி பார்க்க
முடியும். இதனால், எந்த
ஊர் இடத்தையும், எந்த
சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும், பதிவு செய்வது சாத்தியம். எனவே, இந்த மாற்றத்தை கொண்டு வர அரசு முடிவு
செய்துள்ளது. முதற்கட்டமாக, ஆன்லைன்
வசதி உள்ள, 100 சார் - பதிவாளர் அலுவலகங்களில், இத் திட்டம் விரைவில்
அறிமுகப்படுத்தப்படும். படிப்படியாக, அனைத்து அலுவலகங்களுக்கும்
விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பத்திரப்பதிவு முறையில் செய்யப்பட
உள்ள அதிரடி மாற்றத்தால், பொதுமக்களின்
அலைச்சல், அதிகாரிகளின்
கெடுபிடிகள் களையப்படும். அந்தந்த ஊர்களில், இருந்த இடங்களில் இருந்தே,பத்திர பதிவு செய்யலாம்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 23.07.2017
No comments:
Post a Comment