சொந்த மாவட்டங்களில் போலீசார்
பணிபுரிய தடை வழக்கு தள்ளுபடி
மதுரை: போலீஸ் அதிகாரிகள் சொந்த
மாவட்டங்களில் பணியாற்றக்கூடாது என்ற வழிகாட்டுதலை பின்பற்ற நடவடிக்கை கோரிய
வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி
செய்தது.
கன்னியாகுமரி சுலீப் தாக்கல் செய்த
பொதுநல மனு: போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு விசாரணையை நியாயமாக நடத்தும் வகையில்
தமிழக டி.ஜி.பி., 2001 செப்.,25 ல் சுற்றறிக்கை வெளியிட்டார். அதில், 'இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு உயர் பதவி வகிப்பவர்களை சொந்த
மாவட்டங்களில் நியமனம் செய்யக்கூடாது. குறிப்பிட்ட பகுதியில் பெரும்பான்மை சமூகத்தினர்
இருந்தால், அந்த ஸ்டேஷனில் அந்த பெரும்பான்மை
சமூகத்தைச் சேர்ந்த எஸ்.ஐ.,யை நியமிக்கக்கூடாது,' என உள்ளது. இந்த வழிகாட்டுதல்களை சரியாக செயல்படுத்தவில்லை.
கன்னியாகுமரியில் சிறுபான்மை
சமூகத்தினருக்கு எதிராக அதிக குற்றங்கள் நடக்கின்றன. புகாரை போலீசார் சரியாக
விசாரிப்பதில்லை.
போலீஸ் அதிகாரிகளின் இடமாற்றம், நியமனம் தொடர்பாக டி.ஜி.பி.,யின் வழிகாட்டுதல் சுற்றறிக்கையை முழுமையாக செயல்படுத்த அரசுக்கு
உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, 'பொது ஊழியர் என்பவர், அனைத்திற்கும் அப்பாற்பட்டவர். மனுவை தள்ளுபடி செய்கிறோம்,' என்றனர்.
நன்றி : தினமலர்
நாளிதழ் - 26.07.2017
No comments:
Post a Comment