ரூ.20,000/- லஞ்சம் பெற்ற நகராட்சி ஆணையர் கைது!
ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை:
ஒப்பந்ததாரர் புகாரில் வேலூர் மாநகராட்சி ஆணையர் கைது
ஒப்பந்ததாரரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், வேலூர் மாநகராட்சி ஆணையரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று கைது
செய்தனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸ்
தரப்பில் கூறியதாவது:
வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் பாலாஜி (30), மாநகராட்சி ஒப்பந்ததாரர்.
இவர் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, வீடுகளுக்கு
மருந்து தெளிப்பது, தேங்கிய தண்ணீரை அகற்றுவது உள்ளிட்ட
பணிகளை டெண்டர் எடுத்து செய்து வந்தார்.
கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்த பணிகளை பாலாஜி
முடித்தார். இதற்கான தொகை 10 லட்சத்து 90 ஆயிரத்து 200 ரூபாய். இந்த
காசோலையை தனக்கு வழங்குமாறு வேலூர் மாநகராட்சி ஆணையர் குமாரிடம்(54) கேட்டுள்ளார். காசோ லையை வழங்க 2 சதவீதம் கமிஷன் தொகையாக ரூ.22 ஆயிரத்தை வழங்குமாறு ஆணையர் குமார் கேட்டதாகக் கூறப்படுகிறது. ரூ.20 ஆயிரம் வழங்குவதாக பாலாஜி தெரிவித்துள்ளார்.
எனினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலாஜி, வேலூர் லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான
போலீஸார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை
பாலாஜியிடம் கொடுத்துள்ளனர்.
அந்த பணத்துடன் நேற்று மாநகராட்சி
அலுவலகத்துக்கு சென்ற பாலாஜி, ஆணையர் குமாரை
சந்தித்து பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் குமாரை பிடித்து.
அறைக்குள் வைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தினர். பிறகு அங்குள்ள ஆவணங் களை
போலீஸார் ஆய்வு செய்தனர். பின்னர் குமாரை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து ஆணையர் குமார்
வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அதில், 9 லட்சத்து 40 ஆயிரம் பணமும், 26 பவுன் தங்க நகைகளை யும் பறிமுதல் செய்தனர். ஆணையர் கைது
செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 10.08.2017
No comments:
Post a Comment