ஜீவனாம்சம் மாதம் ஒன்றுக்கு ரூ. 4 லட்சம்!
மனைவிக்கு ரூ.4 லட்சம் வழங்க பணக்கார கணவனுக்கு உத்தரவு
புதுடில்லி : 'பிரிந்து வாழும் மனைவிக்கு பராமரிப்பு செலவாக, மாதத்துக்கு, நான்கு லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, பணக்கார கணவனுக்கு, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னை விட்டு பிரிந்து சென்று, குடும்பத் தொழிலை கவனித்து வரும் மிகப் பெரிய பணக்காரரான கணவன், தனக்கு மாத இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, ஒரு பெண், வழக்கு தொடர்ந்தார்.
கீழ்
நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். 'பணக்கார கணவனின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
அதற்கேற்ப, மாத பராமரிப்பு தொகையை நிர்ணயிக்க
வேண்டும்' என, மீண்டும் விசாரணை நீதிமன்றத்துக்கே, இந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் திருப்பி
அனுப்பியது.
அதன்படி, இந்த வழக்கை விசாரித்த, டில்லி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
இந்த வழக்கில் தொடர்புடைய கணவனின்
குடும்பம், மிகப் பெரிய பணக்கார குடும்பம்; அந்த குடும்பத்தினர், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது தொழில் மதிப்பு, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. அதனால், பிரிந்து சென்ற மனைவி மற்றும் அவரது பராமரிப்பில் உள்ள மைனர்
மகளின் மாத பராமரிப்புக்கு, கணவர், ஒவ்வொரு மாதமும், நான்கு லட்சம்
ரூபாயை பராமரிப்பு செலவாக அளிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆண்டும், 15 சதவீதம் உயர்வையும் அளிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில்
கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.08.2017
No comments:
Post a Comment