இறங்குரிமைச் சான்றிதழ் என்றால் என்ன?
இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)
இறந்து போன ஒரு நபரினுடைய பெயரில் இருக்கின்ற முதலீடுகள்/பங்குகள் மற்றும் அவருக்கு பிறரிடம் இருந்து வரவேண்டிய கடன்கள் போன்ற பணப் பலன்களைப் பெறுவதற்கு தனக்குத்தான்/தங்களுக்குத்தான் சட்டபூர்வமாக உரிமை இருக்கின்றது என்பதைக் தெரிவிக்க ஒருவர்/பலர் நீதிமன்றம் மூலம்
பெறுகின்ற சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ் ஆகும்.
உதாரணமாக, இறந்து போன நபருக்கு ஆறு வாரிசுகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களின் ஆறு பெயரையும் உள்ளடக்கிய
வாரிசுச் சான்றிதழ் ஏற்கனவே பெறப்பட்டு இருக்கும்.
இவர்கள் ஆறு பேருக்கும் இறந்தவர் பெயரிலுள்ள சுமார் 12 லட்ச ரூபாய் பங்குகளிலோ அல்லது முதலீடுகளிலோ உரிமை
இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஆறு பேர்களின் பெயருக்கும்
மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை
கோருவார்களோ? என்ற பயம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கோ, நிறுவனங்களுக்கோ வரலாம்.
இதற்காக இந்த ஆறு பேரும் நீதிமன்றத்தை அணுகி தாங்கள் ஆறு பேர்கள்தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச்
சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என
உறுதிமொழியையும் கொடுத்து தங்களில் யாராவது ஒருவருக்கோ அல்லது ஆறு பேருக்குமோ அந்த முதலீட்டை பெயர்
மாற்றம் செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்ய வேண்டும்.
அந்த நிறுவனங்களில் இறந்தவர் பெயரில் எவ்வளவு
முதலீடுகள் அல்லது பங்குகள் உள்ளது? என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச்
செலுத்தினால் நீதிமன்றம், மனுவை பரிசீலணை செய்து அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழை வழங்கும்.
அந்த
இறங்குரிமை சான்றிதழின் அடிப்படையில் நிறுவனங்கள் முதலீடுகளை அல்லது பங்குகளை பெயர்
மாற்றம் செய்தோ அல்லது பணமாக, பிரித்து கொடுப்பதையோ தயக்கமில்லாமல் செய்யும்.
****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment