கீழ்
கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி: உயர் நீதிமன்றம்
அல்லது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில், குற்றஞ்சாட்டப் பட்டோருக்கு, ஜாமின் வழங்கும் நடைமுறையை
கைவிடும்படி, கீழ் கோர்ட்டுகளுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு
உள்ளது.
முன்ஜாமின் :
ஜார்க்கண்ட்
மாநில அரசு சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த, உச்ச
நீதிமன்ற நீதிபதிகள், ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா
அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஜார்க்கண்டை
சேர்ந்த ஒருவர், தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு
நிலுவையில் உள்ளபோது, உச்ச நீதிமன்றத்தில், முன்ஜாமின்
பெற்றுள்ளார். இருப்பினும், ஜார்க்கண்டில் உள்ள, கீழ் கோர்ட்டில்
மீண்டும் ஆஜராகி, வழக்கமான ஜாமின் பெற்றுள்ளார். இதுபோன்ற
சம்பவங்கள் நாடு முழுவதும் நடக்கின்றன.உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில், வழக்கு
நிலுவையில் இருக்கும்போது, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு, கீழ்
கோர்ட்டுகள், வழக்கமான ஜாமின் அளிக்கும் நடைமுறையை
நிறுத்திக் கொள்ள வேண்டும். உயர் நீதிமன்றம், உச்ச
நீதிமன்றம் அல்லது செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில், முன்
ஜாமின் அளித்துள்ள பட்சத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட
நபர், கீழ் கோர்ட்டில் சரண் அடைந்து, வழக்கமான
ஜாமின் கோரக் கூடாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள
நபர், சரண் அடைவதும், வழக்கமான
ஜாமின் கோருவதும், சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாக
கருதப்படும்.
அர்த்தமற்றது
:
கீழ் கோர்ட்டில் ஜாமின் பெற்ற பின், மேல்
நீதிமன்றங்களில், சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை முழுமை
அடைந்து, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு, ஜாமின்
நிராகரிக்கப்படும்போது, அது, அர்த்தமற்றதாகி
விடும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 14.08.2017
No comments:
Post a Comment