கத்தார் நாட்டுக்குச் செல்ல, இனி விசா நமக்கு தேவை இல்ல!
இந்தியா உட்பட 80 நாடுகளுக்கு சலுகை.. விசா இல்லாமல் இனி
கத்தாருக்கு செல்லலாம்!
துபாய்: விசா இல்லாமல் 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கத்தாருக்கு இனி
சென்று வர முடியும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அந்நாட்டு அதிகாரிகள்
அறிவித்துள்ளனர்.
கத்தாருக்கு செல்ல விரும்பும் 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசாவிற்கு
இனி விண்ணப்பிக்க வேண்டாம். பணமும் கட்டத் தேவையில்லை. இந்த சலுகையைப் பெற வரையறை
எதுவும் கிடையாது. பல முறை பயணம் செய்யும் வகையில் இந்தச் சலுகை
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகைகள் பெற்றுள்ள நாடுகளின் பட்டியலையும் அந்நாடு
அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் விசா இன்றி
கத்தாருக்கு பயணிக்கலாம்.
இந்தச் சலுகையைப் பெற விரும்புவோர் குறைந்தபட்சம் ஆறு
மாதங்களுக்குச் செல்லுபடியாகும் வகையிலான பாஸ்போர்ட் மற்றும் நாடு திரும்புவதற்கான
டிக்கெட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து, கத்தார் சுற்றுலாத்துறை தலைவர் ஹாசன்
அல் இப்ராஹிம், கத்தார்
இப்போது மிகவும் திறந்தவெளி நாடாகிவிட்டது என்றும் புகழ்பெற்ற விருந்தோம்பல், கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை
பொக்கிஷங்களை பார்க்க பயணிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலவச
டிரான்சிட் விசாவை கத்தார் அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயணிகள் குறைந்தபட்சம் 5 மணி நேரம் முதல் நான்கு நாட்கள் வரை
டிரான்சிட் விசாவில் கத்தாரில் இருக்கலாம். இதனைத் தொடர்ந்து தற்போது 80 நாடுகள் விசா இல்லாமல் பயணிக்கும்
சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி : ஒன் இந்தியா தமிழ் செய்திகள் - 09.08.2017
No comments:
Post a Comment